ரத்தான பாகிஸ்தான் போட்டி. அடுத்த போட்டியிலும் காத்திருக்கும் மழை – இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற என்ன வழி?

IND-vs-PAK-Rain
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் நேற்று செப்டம்பர் 2-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 266 ரன்கள் குவித்து இருந்த வேளையில் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான அணி களமிறங்கும் முன்னர் பெய்ய துவங்கிய மழை 2 மணி நேரங்களுக்கும் மேல் தொடர்ந்து பெய்ததால் போட்டியை நடத்த முடியாது என்று கூறி அம்பயர்கள் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியை வழங்கி போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணி மூன்று புள்ளிகள் உடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதே வேளையில் இந்திய அணி தற்போது ஒரு புள்ளியுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் போர் சுற்று இந்திய அணி தகுதி பெற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதன்படி அடுத்த நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும் நேபாளத்துக்கு எதிராக பலம் வாய்ந்த இந்திய அணி விளையாட இருப்பதால் 100% இந்திய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு என்பது இப்போதே உறுதி.

- Advertisement -

ஆனால் செப்டம்பர் 4-ஆம் தேதி நேபாள் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான தெளிவான தகவலை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். அதன்படி அடுத்த போட்டி மழையால் தடை பட்டால் இந்திய அணி இரண்டாவது அணியாக சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதையும் படிங்க : IND vs PAK : டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஏன்? ரோஹித் சர்மா – கொடுத்த விளக்கம்

ஏனெனில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நின்றதால் கிடைத்த ஒரு புள்ளியும், நேபாள் அணிக்கு எதிராக ஒருவேளை போட்டி நடைபெறாமல் போனால் அதிலும் ஒரு புள்ளி கிடைத்து அடுத்த சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெறும். அதே வேளையில் நேபாள் அணிக்கு எதிராக இந்திய அணி ஒருவேளை தோல்வியை சந்தித்தால் இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement