IND vs PAK : டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஏன்? ரோஹித் சர்மா – கொடுத்த விளக்கம்

Rohit-Sharma
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டியானது நேற்று கண்டி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலகில் தலைசிறந்த இரு அணிகள் மோதுவதால் எந்த அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்புடன் இருநாட்டு ரசிகர்களும் காத்திருந்தனர். ஆனால் நேற்றைய போட்டி மழை காரணமாக தடைபட்டதால் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் குவித்து இருந்தாலும் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறு என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் கண்டி நகரில் கடந்த சில நாட்களாகவே வெளியான வானிலை அறிக்கையின் படி 90% சதவீதம் மழை காரணமாக போட்டி பாதிக்கப்படும் என்று தெரிவித்த பின்னரும் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவரையும் அதிருப்தி அடைய வைத்திருந்தது.

இந்நிலையில் டாஸ் வென்று ஏன் பேட்டிங்கை தேர்வு செய்தேன்? என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாசின் போதே விளக்கம் ஒன்றினை கொடுத்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இன்று வானிலை மோசமாக இருந்தாலும் நாங்கள் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கப்போவதில்லை. நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இது போன்ற சவால் மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்த்து விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : IND vs PAK : தெரிஞ்சே தவறு செய்த ரோஹித். அதிர்ஷ்டத்தால் தப்பிய இந்தியா – நல்லவேளை தப்பிச்சோம்

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்து நல்ல ஓய்வு கிடைத்திருந்த வேளையில் பெங்களூருவில் நல்ல பயிற்சியையும் மேற்கொண்டோம். எனவே இந்த தொடரில் நாங்கள் அதை வைத்து என்ன சாதிக்க போகிறோம் என்பதை சோதித்து பார்க்க வேண்டும். இதுபோன்ற தரமான அணிகளுக்கு எதிரே நாம் ஒரு சவாலான ஆட்டத்தை விளையாட வேண்டும் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement