நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கண்டி நகரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க தயாராகிய வேளையில் மழை பெய்ததால் போட்டி தடைப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காதன் காரணமாக போட்டி இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வியின்றி சைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ரோகித் சர்மா டாசின் போதே தெரிந்தே தவறு ஒன்றினை செய்திருந்தார். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக மழை அவரை காப்பாற்றியது என்று கூறலாம். ஏனெனில் நேற்றைய போட்டி ஆரம்பிக்கும் முன்னதாகவே கடந்த இரண்டு நாட்களாக வெளியான வானிலை அறிக்கையின் படி போட்டி நடைபெறும் நாளன்று 90% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இப்படி மழைக்கு வாய்ப்பு இருப்பது தெரிந்தும் ரோகித் சர்மா டாசின் போது வெற்றி பெற்றும் பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் எப்போதுமே போட்டி மழையால் பாதிக்கப்படும் என்று தெரிந்தால் டாஸ் வெல்லும் கேப்டன்கள் முதலில் பந்துவீச தான் தீர்மானிப்பார்கள்.
ஏனெனில் இரண்டாம் பாதியில் மீண்டும் மழை வரும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்படும். அவ்வாறு ஓவர்கள் குறைக்கப்பட்டால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி தான் எப்போதுமே முன்னிலை பெறும். இந்த விடயங்கள் நன்றாக தெரிந்தும் அவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவரும் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : IND vs PAK : பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் 15 வருட சாதனையை தகர்த்த இஷான் கிசான் – முதல் இந்தியராக தனித்துவ சாதனை
அதே வேளையில் இரண்டாம் பாதியில் ஒருவேளை பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கி ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஆனாலும் மழை வந்து இந்திய அணிக்கு சாதகமாக போட்டியை முடித்தும் கொடுத்தது. இல்லையெனில் முடிவு என்ன வேண்டும் என்றாலும் ஆகியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.