ரோஹித், கில், விராட், ராகுல் பாண்டியாவை சாய்த்து – மாயாஜாலம் செய்த 20 வயது இலங்கை ஸ்பின்னர், வீக்னெஸை அம்பலமாக்கி அசத்தல்

Dunith Wellalage
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 13ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஃபைனல் வாய்ப்பை நெருங்கிய இந்தியாவை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அனைத்தும் மீண்டும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இருப்பினும் அதில் தடுமாற்றமாக செயல்பட்ட சுப்மன் கில்லை 19 (25) ரன்களில் தம்முடைய மாயாஜால சுழலால் கிளீன் போல்டாக்கிய இளம் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் துணித் வெல்லலேக் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 3 (12) ரன்களில் கேட்ச் கொடுக்க வைத்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதோடு நிற்காமல் தம்முடைய அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (48) ரன்கள் குவித்து சவாலை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவையும் அவர் கிளீன் போல்ட்டாக்கியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

மாயாஜால ஸ்பின்னர்:
அதனால் 91/3 என சரிந்த இந்தியாவை கே எல் ராகுல் மற்றும் இசான் கிசான் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடினர். ஆனால் அப்போது மீண்டும் மாயாஜாலம் செய்த வெல்லலேக் 39 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலான கேஎல் ராகுலை தம்மிடமே கேட்ச் கொடுக்க வைத்து அவுட்டாக்கினார்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நிலைத்து விளையாட முயற்சித்த இசான் கிசான் 39 (44) ரன்களில் அஸலங்கா பந்தில் அவுட்டாக அடுத்ததாக களமிறங்கியிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 (18) ரன்களில் வெல்லலேக் சுழலில் சிக்கி இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 4 (19) ரன்கள் அவுட்டானதால் போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றும் தடுமாறும் இந்தியா 47 ஓவரில் 197/9 எடுத்து போராடிய போது மழை வந்தது.

- Advertisement -

அதை விட வெறும் 20 வயதிலேயே விராட் கோலி, ரோஹித் சர்மா, கில், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா போன்ற உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்களை தன்னுடைய மாயாஜால சூழலால் திணறடித்த வெல்லலேக் 10 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 40 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டுகளை அள்ளி வருகிறார். குறிப்பாக இந்தியா போன்ற வலுவான அணியை இலங்கை தோற்கடிப்பதற்கு ஒரு மேஜிக் நிகழ்த்த வேண்டியது கட்டாயம் என்ற நிலைமையில் அதை அவர் செய்தது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது.

இதையும் படிங்க: IND vs SL : கிங் கோலிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா – அதிரடி வேகத்தில் புதிய உலக சாதனை

அதே சமயம் ஷாஹீன் அப்ரிடி போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவது போலவே கடந்த காலங்களில் இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற இந்திய வலது கை பேட்ஸ்மேன்கள் தடுமாறியுள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்ன்களின் அந்த பலவீனத்தை இப்போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் வெல்லலேக் அம்பலப்படுத்தினார் என்றே சொல்லலாம்.

Advertisement