IND vs SL : கிங் கோலிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா – அதிரடி வேகத்தில் புதிய உலக சாதனை

Rohit Sharma Sachin tendulkar
- Advertisement -

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை வெற்றிகரமான இந்தியா எதிர்கொண்டது. அதில் இதே மைதானத்தில் நேற்று பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்துள்ள இந்தியாவை தாங்கள் ஃபைனலுக்கு செல்ல தோற்கடிக்கும் முனைப்புடன் இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

அந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் சர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்சர் பட்டேல் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் கடந்த போட்டி போலவே நிதானமும் அதிரடியும் கலந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

ஹிட்மேன் சாதனை:
குறிப்பாக கில்லை விட அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா கௌசல் ரஜிதா வீசிய 5வது ஓவரின் பந்தில் தமக்கே உரித்தான அட்டகாசமான சிக்சர் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்தார். அதன் வாயிலாக ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி, எம்எஸ் தோனி ஆகியோருக்கு பின் 10000 ரன்கள் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதை 241 இன்னிங்ஸில் தொட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. விராட் கோலி : 205
2. ரோஹித் சர்மா : 241*
3. சச்சின் டெண்டுல்கர் : 259
4. சௌரவ் கங்குலி : 263
5. ரிக்கி பாண்டிங் : 266
6. ஜாக் காலிஸ் : 272
7. எம்எஸ் தோனி : 273
8. பிரைன் லாரா : 278
9. கிறிஸ் கெயில் : 282
10. ராகுல் டிராவிட் : 309

- Advertisement -

ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெற்ற தடுமாறிய அவர் முன்னாள் கேப்டன் தோனி துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தது முதல் விஸ்வரூபம் எடுத்து எதிரணிகளைப் பந்தாடி 3 இரட்டை சதங்களை அடித்து அதிகபட்ச ஸ்கோர் (264) பதிவு செய்த வீரராக இரட்டை உலக சாதனைகளை ஏற்கனவே படைத்துள்ளார். சொல்லப்போனால் தம்முடைய கேரியரில் முதல் 100 இன்னிங்ஸில் 2752 ரன்களை மட்டுமே எடுத்து ரோகித் சர்மா தடுமாறினார்.

இதையும் படிங்க: இந்திய அணியிடம் அவமானப்படவே அந்த முடிவை எடுத்தீங்களா? அது எதுக்கு சமம் தெரியுமா – பாபர் அசாமை விளாசிய சோயப் அக்தர்

ஆனால் அடுத்த 141 இன்னிங்ஸில் 7248 ரன்களை எடுத்து ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் மிரட்டி வரும் அவர் தற்போது 10000 ரன்கள் அடித்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அசத்தியுள்ளார். அவருடைய சிறப்பான துவக்கத்தால் சற்று முன் வரை இந்தியா 90/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. குறிப்பாக கில் 19 ரன்களில் அவுட்டானதால் வந்த விராட் கோலியும் 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ரோஹித் 52* ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Advertisement