இந்திய அணியிடம் அவமானப்படவே அந்த முடிவை எடுத்தீங்களா? அது எதுக்கு சமம் தெரியுமா – பாபர் அசாமை விளாசிய சோயப் அக்தர்

Shoaib Akhtar 5
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூப்பர் 4 சுற்றின் முக்கியமான போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஃபைனல் வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கி மழையால் 2 நாட்கள் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுப்மன் கில் 58, ரோகித் சர்மா 56, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மிகச் சிறப்பான ரன் குவிப்பால் 50 ஓவர்களில் 356/2 ரன்கள் குவித்து வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது.

அதை தொடர்ந்து 357 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தில் ஆரம்பம் முதலே பகார் ஜமான் 27, கேப்டன் பாபர் அசாம் 10, முகமத் ரிஸ்வான் 2, சடாப் கான் 6 என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை குறைந்த ரன்களில் இழந்து 32 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை செய்தார்.

- Advertisement -

சோயப் அக்தர் விமர்சனம்:
அதனால் ஃபைனல் செல்வதற்கு இன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை எப்படியாவது இந்தியா தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைமையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னதாக ஓரளவு பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்தியா போன்ற தரமான அணிக்கு எதிராக டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் பேட்டிங் தேர்வு செய்யாத பாபர் அசாமின் முடிவுக்கு ஆரம்பத்திலேயே வெற்றியை பரிசளித்ததற்கு சமமாக அமைந்ததாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது ஒரு அவமானமான தோல்வி. இவ்வளவு நல்ல பேட்டிங் பிட்ச்சில் பாகிஸ்தான் முதலில் பந்து வீச தீர்மானித்தது ஒரு கவலைக்குரிய முடிவென்று எனக்கு வித்தியாசமாக தோன்றியது. இருப்பினும் ஒரே ஒரு தோல்விக்காக இந்தியாவைப் போலவே நீங்கள் பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே பாகிஸ்தான் கம்பேக் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“பொதுவாகவே இது போன்ற போட்டிகளில் டாஸ் வென்று என்ன செய்யலாம் அல்லது பந்து வீச்சில் என்ன மாற்றங்களை செய்யலாம் என்பது போன்ற முடிவுகள் தான் வெற்றியில் முக்கிய பங்காற்றும். அதை சரியாக செய்வதற்கு நம்முடைய அணி நிர்வாகம் கேப்டன் அல்லது வீரர்கள் சாதுரியமாக இருக்க வேண்டும். என்னை கேட்டால் இந்த ஒரு பேட்டிங் பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் இந்தியாவுக்கு பேட்டிங்கை கொடுத்தது ஆரம்பத்திலேயே வெற்றியை கொடுத்ததற்கு சமமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்த வரலாற்று தோல்வி பரிசை கொடுத்ததற்கு இந்தியாவுக்கு ரொம்ப நன்றி – பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி

அப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தானுக்கு ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா ஆகியோர் காயத்தை சந்தித்துள்ளது மற்றுமொரு பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் அந்த அணி ஃபைனலுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லுமா என்ற கவலை பாகிஸ்தான் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement