இந்த வரலாற்று தோல்வி பரிசை கொடுத்ததற்கு இந்தியாவுக்கு ரொம்ப நன்றி – பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி

Pakistan Coach
Advertisement

இந்தியாவுக்கு எதிராக செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இலங்கையின் கொழும்பு நகரில் மழையால் ரிசர்வ் நாள் வரை சென்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 356/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 57, ரோகித் சர்மா 56, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட அனைத்து பாகிஸ்தான் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ரன்களை குவித்தனர்.

அதை தொடர்ந்து 357 என்ற மிகப்பெரிய இலக்கை சேசிங் செய்த பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் 27, இமாம் 9, பாபர் அசாம் 10, முகமது ரிஸ்வான் 2, சல்மான் ஆகா 13, சடாப் கான் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ரொம்ப நன்றி:
அதனால் இந்தியா கிட்டத்தட்ட ஃபைனலுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் பாகிஸ்தான் வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் மிகப்பெரிய தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு நன்றி என பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் ப்ராட்பர்ன் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது உலகக் கோப்பைக்கு முன்பாக தங்களுடைய அணியில் இருக்கும் பலம் பலவீனங்களை கண்டறிந்து முன்னேறுவதற்கான வழிகளை இந்தியா காண்பித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. கடந்த 2 நாட்களாக கிடைத்த தோல்வி பரிசுக்கு நாங்கள் நன்றி உடையவர்களாக இருக்கிறோம் என்பதே என்னுடைய ஆதங்கமாகும். இந்திய அணியில் இருக்கும் சில தரமான வீரர்களை நாங்கள் அடிக்கடி எதிர்கொள்வதில்லை”

- Advertisement -

“இருப்பினும் கடந்த 3 மாதங்களில் நாங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்திக்கவில்லை. எனவே இது எங்களுக்கு நல்ல விழித்துக் கொள்ளும் தருணமாக அமைந்துள்ளது. ஆனால் இதிலிருந்து கிடைத்த பாடங்களில் நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும். மேலும் கடந்த 2 நாட்களாக நாங்கள் சிறப்பாக செயல்படாததற்காக இந்த தோல்வி பரிசாக கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை ஃபைனலுக்கு செல்ல இந்தியாவின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான் – பரிதாப புள்ளிவிவரம் இதோ

“அத்துடன் போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. 2 நாட்களாக நாங்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை” என்று கூறினார். இந்த நிலைமையில் பெரிய தோல்வியால் மோசமான ரன் ரேட் பெற்றுள்ள பாகிஸ்தான் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் முக்கியமான போட்டியில் இலங்கையை எப்படியாவது இந்தியா தோற்கடித்தால் தான் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement