ஆசிய கோப்பை ஃபைனலுக்கு செல்ல இந்தியாவின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான் – பரிதாப புள்ளிவிவரம் இதோ

IND vs PAK 6
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் முடிந்து சூப்பர் 4 சுற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாகவும் டாப் 2 அணிகளாகவும் இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் நேபாளை பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்த அவ்விரு அணிகள் 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்று தகுதி பெற்றன. அந்த நிலைமையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது.

மழையால் ரிசர்வ் நாள் வரை சென்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 356/2 ரன்கள் குவித்தது. குறிப்பாக லீக் போட்டியில் 66/4 என ஆரம்பத்திலேயே திணறும் அளவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை இந்த போட்டியில் ரோகித் சர்மா 56, கில் 58, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ரன்களை குவிப்பதற்கு உதவினர்.

- Advertisement -

இந்தியாவிடம் உதவி:
அதைத்தொடர்ந்து 357 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்த வேண்டிய அழுத்தத்தில் நேர்த்தியாக பந்து வீசிய இந்தியாவுக்கு எதிராக ஆரம்பம் முதலே தடுமாறிய பாகிஸ்தான் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 32 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பகார் ஜமாத் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனால் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அத்துடன் சூப்பர் 4 சுற்றின் புள்ளி பட்டியலில் 1 போட்டியில் 2 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த காரணத்தால் +4.560 என்ற அபாரமான ரன்ரேட்டை பெற்று ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை 99% உறுதி செய்து விட்டது.

- Advertisement -

அதே போல இதுவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த வங்கதேசம் ஏற்கனவே தொடரிலிருந்து 99% வெளியேறி விட்டது. அதனால் ஃபைனலுக்கு 2வது அணியாக தகுதி பெறுவதற்கு நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் இன்னும் 2 போட்டிகளில் விளையாட காத்திருக்கும் இலங்கை ஃபைனல் செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய அடுத்த 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பதிவு செய்தால் கூட இலங்கை வந்து விடும். மறுபுறம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவிடம் பெற்ற படுதோல்வியால் இலங்கையை (+0.420) விட அந்த அணியின் (-1.892) ரன்ரேட் மிகவும் மோசமாக உள்ளது.

இதையும் படிங்கஇந்தியாவுக்கு எதிரா இன்னும் இதை கூட செய்யல – இவர் என்னத்த நம்பர் ஒன் பேட்ஸ்மேனோ, பாபர் அசாம் மீது ரசிகர்கள் அதிருப்தி

அதனால் இன்றைய போட்டியில் ஒருவேளை இந்தியாவை இலங்கை தோற்கடித்து அந்த அணியை தங்களுடைய இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தினாலும் ஃபைனலுக்கு வர முடியாது. எனவே இன்றைய போட்டியில் இலங்கையை எப்படியாவது இந்தியா வீழ்த்த வேண்டும் என்ற உதவியை பார்த்து பாகிஸ்தான் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement