அடுத்தடுத்த சிக்சருடன் மாஸ் காட்டிட்டீங்க நண்பா புல்லரிக்குது – திலக் வர்மாவை பாராட்டிய குட்டி ஏபிடி ப்ரேவிஸ்

Dewald Brevis Tilak varma
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ட்ரினிடாட் நகரில் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ரோவ்மன் போவல் 48 (32) நிக்கோலஸ் பூரான் 41 (34) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 149/6 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு திலக் வர்மா 39 (22) ரன்கள் எடுத்ததை தவிர்த்து இசான் கிசான் 6, சுப்மன் கில் 3, சூரியகுமார் யாதவ் 21, கேப்டன் ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் 145/9 ரன்களுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தி வென்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர், ஓபேத் மெக்காய் ரொமாரியா செபார்ட் எடுத்த தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

வாழ்த்திய குட்டி ஏபிடி:
முன்னதாக இந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இளம் வீரர் திலக் வர்மா ஃபீல்டிங்கில் 2 அபாரமான கேட்ச்களை படித்து டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அறிமுக போட்டியிலேயே 2 கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னா மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோரது சாதனைகளை சமன் செய்தார். அதை விட பேட்டிங்கில் சந்தித்த முதல் பந்தில் ரன் எடுக்காத அவர் அல்சாரி ஜோசப் வீசிய 2வது பந்தில் லெக் சைட் திசையில் அதிரடியான 81 மீட்டர் சிக்சர் அடித்து தன்னுடைய கேரியரின் முதல் ரன்னை அட்டகாசமாக எடுத்தார்.

அத்துடன் நிற்காத அவர் அதற்கடுத்த பந்திலும் சிக்ஸர் பறக்க விட்டு 39 (22) ரன்களை 177.27 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து தன்னுடைய அறிமுக போட்டியில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் கடந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் முதல் முறையாக அசத்தி இந்த வருடம் 11 போட்டிகளில் 342 ரன்களை 164.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அசத்தியதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். குறிப்பாக அதிரடியான இடது கை பேட்ஸ்மேனாக அசத்தும் அவர் சுரேஷ் ரெய்னாவை போலவே செயல்படுவதாக ரசிகர்கள் பாராட்டினர்.

- Advertisement -

இந்நிலையில் அறிமுகப் போட்டியிலேயே 2 சிக்சர்களுடன் சிறப்பாக செயல்பட்டது புல்லரிப்பை கொடுத்ததாக திலக் வர்மாவுக்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் தேவாலட் ப்ரேவிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் போல செயல்படுவதால் குட்டி ஏபிடி என்று ரசிகர்களால் பாராட்டப்படும் அவர் மும்பை அணியில் ஒன்றாக விளையாடி திலக் வர்மாவுக்கு நண்பராக இருக்கிறார். அந்த வகையில் அறிமுக போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவர் வாழ்த்தி பேசியது பின்வருமாறு.

“ஹேய் நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்களை விட உற்சாகமாக இருக்கிறேன். எனது தரப்பிலிருந்தும் ப்ரேவிஸ் குடும்பத்திலிருந்தும் நான் உங்களுக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இது ஒரு சிறந்த தருணமாகும். இந்த சமயத்தில் உங்களுடைய பெற்றோர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நீங்கள் உங்களுடைய கனவை நிறைவேற்றியதை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது”

இதையும் படிங்க:வீடியோ : முதலில் டிராவிட்டை ட்ராப் பண்ணுங்க, தடுத்த அம்பயர் – பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட மெகா குளறுபடி, ரசிகர்கள் கொந்தளிப்பு

“குறிப்பாக 2, 3வது பந்தில் நீங்கள் விளையாடிய விதம் எனக்கு புல்லரிப்பை கொடுத்தது. எனவே இப்போட்டி மட்டுமல்லாமல் இத்தொடர் முழுவதும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் இந்தியாவுக்காக அனைத்து போட்டியிலும் வெல்ல வாழ்த்துகிறோம். சீயர்ஸ் பிரதர்” என்று கூறினார். அவருடைய வாழ்க்கை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்த திலக் வர்மாவும் அதற்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement