முதலில் டிராவிட்டை ட்ராப் பண்ணுங்க, தடுத்த அம்பயர் – பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட மெகா குளறுபடி, ரசிகர்கள் கொந்தளிப்பு

Rahul Dravid
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ரோவ்மன் போவல் 48 (32) ரன்கள் நிக்கோலஸ் பூரான் 41 (34) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் 149/6 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால், அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுகப் போட்டியில் அசத்திய திலக் வர்மா 39 (22) ரன்கள் எடுத்ததை தவிர்த்து இசான் கிசான் 6, சுப்மன் கில் 3, சூரியகுமார் யாதவ் 21, கேப்டன் ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மெகா குளறுபடி:
அதனால் 20 ஓவர்களில் 145/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியாவை தோற்கடித்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செபார்டு, ஜேசன் ஹோல்டர், ஓபேத் மெக்காய் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் அக்சர் படேல் 7வது இடத்தில் களமிறங்கி போராடி 13 (11) ரன்னில் அவுட்டாகி சென்ற போது வந்த அர்ஷிதீப் சிங் 19வது ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து வெற்றிக்கு போராடினார்.

அப்போது எதிர்ப்புறம் தடுமாறிய குல்தீப் யாதவ் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட்டானதும் முகேஷ் குமார் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஹால் களமிறங்கினார். ஆனால் அவருக்கு பேட்டை ஒழுங்காக கையில் கூட பிடிக்க தெரியாது என்பது அனைவருக்குமே தெரிந்ததாகும். அதன் காரணத்தாலேயே திடீரென முகேஷ் குமாரை பேட்டிங் செய்ய அனுப்புவதற்கு ராகுல் டிராவிட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் முயற்சித்தனர்.

- Advertisement -

ஆனால் அதற்குள் அவர்களது பேச்சை கேட்டு களத்திற்குள் வந்த சஹால் வந்த வேகத்திலேயே ஃபெவிலியன் திருப்பிய நிலையில் முகேஷ் குமார் களமிறங்குவதற்காக வந்தார். இருப்பினும் களத்திற்குள் ஒருமுறை வந்த பேட்ஸ்மேன் அவுட்டாகும் வரை அல்லது காயமடைந்து வெளியேறும் வரை இதர காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது என்பது அடிப்படை விதிமுறையாகும். அதை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றிய நடுவர்கள் அதெல்லாம் அனுமதிக்க முடியாது என்று சகாலை மீண்டும் பேட்டிங் செய்ய வர வைத்தனர்.

இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அடிப்படை விதிமுறை கூட தெரியாத அளவுக்கு இருக்கிறீர்களா அல்லது அழுத்தமான நேரத்தில் எந்த பேட்டிங் வரிசையை களமிறக்குவது என்பதே தெரியாமல் இருக்கிறீர்களா என ராகுல் டிராவிட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இதே போலவே ரோகித் சர்மாவை 12 வருடங்கள் கழித்து 7வது இடத்திலும் அக்சர் பட்டேலை 3வது இடத்திலும் இஷ்டத்திற்கு களமிறக்கிய ராகுல் டிராவிட் 2007 உலகக் கோப்பை போல பேட்டிங் வரிசையில் தாறுமாறான மாற்றங்களை செய்தார்.

அதனால் 2023 உலகக்கோப்பை தூங்குவதற்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இப்படி சோதனை செய்து கொண்டிருக்கிறீர்களே என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அப்படி விமர்சித்து முழுமையாக ஒரு வாரம் கூட முடியாத நிலைமையில் அதிலிருந்து எந்த பாடத்தையும் கற்காத ராகுல் டிராவிட் அந்த முக்கிய நேரத்தில் மீண்டும் யாரை அனுப்புவது என்று தெளிவு இல்லாமலேயே இருந்தது அம்பலமாகியுள்ளது.

இது மட்டுமல்லாமல் பொறுப்பேற்றது முதலே கடந்த 2 வருடங்களில் சோதனை முயற்சி என்ற பெயரில் அவர் செய்து வரும் குளறுபடிகள் 2022 ஆசிய டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் முதலில் ராகுல் டிராவிடை அணியிலிருந்து டிராப் செய்யுங்கள் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement