ஷேன் வார்னே போல் மேஜிக் பந்தால் க்ளீன் போல்ட்டாக்கிய ஹர்பஜன், உறைந்து போன கெயில் – வியந்த உத்தப்பா

Harbhajan Singh Legends League Gayle
- Advertisement -

ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் டி20 தொடரில் 2வது சீசன் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தொடரில் மார்ச் 11ஆம் தேதியன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான உலக ஜெய்ன்ட்ஸ் மற்றும் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய மகாராஜாஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த உலக அணி 20 ஓவர்களில் 166/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ் கெயில் 4 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான் தொடக்கம் கொடுத்த கேப்டன் ஆரோன் பின்ச் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (32) ரன்களும் ஷேன் வாட்சன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 55 (32) ரன்களும் எடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் ஜாக் கேலிஸ் 8, ராஸ் டைலர் 1 என முக்கிய வீரர்களை குறைவான ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 167 ரன்களை துரத்திய இந்திய மஹாராஜாஸ் அணிக்கு 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறந்த தொடக்கம் கொடுத்த ராபின் உத்தப்பா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 29 (21) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

மேஜிக் பந்து:
இருப்பினும் அடுத்து வந்த முரளி விஜய் 11 (9) ரன்களில் காயமடைந்து வெளியேறிய நிலையில் சுரேஷ் ரெய்னா 19 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் தொடக்க வீரராக களமிறங்கி 9 பவுண்டரி 1 சிக்சருடன் 68 (42) ரன்கள் குவித்த கேப்டன் கௌதம் கம்பீரை முக்கிய நேரத்தில் அவுட்டாக்கிய உலக அணி யூசுப் பதானையும் 7 (10) ரன்களில் காலி செய்தது. அதனால் வெற்றியை நெருங்கிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில் வெறும் 8 ரன்கள் தேவைப்பட்ட போது அட்டகாசமாக பந்து வீசிய பிரட் லீக்கு எதிராக ஸ்டூவர்ட் பின்னி 2 (3) ரன்களில் அவுட்டான நிலையில் 21* (17) ரன்கள் எடுத்த போராடிய முகமது கைஃப் வெற்றிகரமாக பினிஷிங் செய்ய முடியவில்லை.

அதனால் 20 ஓவர்களில் 164/5 ரன்களுக்கு இந்திய மகாராஜாஸ் அணியை கட்டுப்படுத்திய உலக ஜெய்ண்ட்ஸ் அணி வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரிக்கார்டோ போவல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அப்படி பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உலக அணிக்கு ஹர்பஜன் சிங் வீசிய 3வது ஓவரை கிறிஸ் கெயில் எதிர்கொண்டார். குறிப்பாக முதல் பந்தை மிகவும் வித்தியாசமாக ஒய்ட் போல ஹர்பஜன்சிங் வீசிய நிலையில் அதை தாமதமாக விக்கெட் கீப்பரின் பின் திசையில் கிறிஸ் கெயில் அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

ஆனால் லைனுக்கு வெளியே பிட்ச் ஆன அந்த பந்து தரையில் பட்டதும் எதிர்பாராத வகையில் சுழன்று கிறிஸ் கெயில் பேட்டை சுழற்றி வேகத்தையும் மிஞ்சி திடீரென்று உள்ளே திரும்பி ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. அதனால் கிளீன் போல்ட்டான கிறிஸ் கெயில் எப்படி அவுட்டானோம் என்ற வகையில் உறைந்து போய் ஒரு சில நொடிகள் அங்கேயே நின்று ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் ஒய்ட் போல செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பந்து கெயில் போன்ற மகத்தான பேட்ஸ்மேனை கிளீன் போல்ட்டாக்கியதை சற்றும் எதிர்ப்பாராத ஹர்பஜன் சிங் அந்த விக்கெட்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

குறிப்பாக யாருமே எதிர்பாராத வகையில் திரும்பி வந்த பந்தை வீசிய ஹர்பஜன் சிங்கை விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட இந்திய மகாராஜாஸ் அணியினர் சிரித்த முகத்துடன் எப்படி இந்த பந்தை வீசினார்கள் என்று பாராட்டினார்கள்.

இதையும் படிங்க:வீடியோ : 4வது போட்டியின் முடிவுகளை கச்சிதமாக முன்கூட்டியே கணித்த டிகே – ரசிகர்கள் வியப்புடன் பாராட்டு

மேலும் 1993 ஆஷஸ் தொடரில் மைக் கேட்டிங்க்கு ஷேன் வார்னேவின் நூற்றாண்டின் சிறந்த பந்து போல இந்த பந்தும் இருப்பதாக நிறைய ரசிகர்கள் இதை பார்த்து ஹர்பஜன் சிங்கை பாராட்டி வருகிறார்கள். அது ஆஃப் சைட் திசையில் பிட்ச் ஆகி ஸ்டம்ப்பை பதம் பார்த்த நிலையில் இது லெக் சைட் திசையில் கிளீன் போல்ட்டாக்கியது மட்டுமே வித்தியாசமாகும்.

Advertisement