வீடியோ : எப்டியோ ஜெய்ச்சுட்டோம்ல, எதுக்கெடுத்தாலும் விமர்சிக்காதிங்க – கவாஸ்கர், அஜய் ஜடேஜாவுக்கு புஜாரா பதிலடி

Sunil Gavaskar Pujara
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டுள்ளது. முன்னதாக டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் 2வது போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்தும் போது கேப்டன் ராகுல், விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 74/7 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது நங்கூரமாக நின்று 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 42* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர்.

அதனால் வங்கதேசத்திடம் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்க வேண்டிய அவமான தோல்வியிலிருந்து இந்தியா தப்பினாலும் இத்தொடரில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ராகுல் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக 145 ரன்களை துரத்துகையில் ஆரம்பத்திலேயே ஒரு சில விக்கெட்டுகளை இழந்த போது விராட் கோலிக்கு பதில் அக்சர் பட்டேல் முன்னதாகவே களமிறங்கியது நிறைய ரசிகர்களை குழம்ப வைத்தது.

- Advertisement -

புஜாரா பதிலடி:
ஒருவேளை அந்த இடத்தில் இடது கை பேட்ஸ்மேன் தேவைப்பட்டிருந்தால் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் களமிறங்காமல் அக்சர் படேல் களமிறங்கியது ஏன் என்று ரசிகர்கள் குழம்பினார்கள். அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் அஜய் ஜடேஜா ஆகியோர் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரை ஒழித்து வைத்து அக்சர் பட்டேலை முன்கூட்டியே களமிறக்கியது ஆரம்பத்திலேயே இந்தியா பயந்து விட்டது என்ற செய்தியை வங்கதேசத்துக்கு அனுப்பியதாக விமர்சித்திருந்தார்கள். அதோடு நிற்காமல் அதை நேரடியாகவே போட்டியின் முடிவில் விளையாடிய புஜாராவிடம் அஜய் ஜடேஜா கேட்டார்.

அதற்கு எதிரணியில் 2 இடது கை ஸ்பின்னர்கள் இருந்த காரணத்தால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்த புஜாரா அந்த சமயத்தில் இந்திய அணி நிர்வாகம் சரியாகவே முடிவெடுத்ததாக பதிலளித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வங்கதேசத்தின் 3 விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களில் இருவர் இடது கை ஸ்பின்னர்களாக இருந்தனர். எனவே அவர்களை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட அந்த முடிவு சிறப்பானதாகும்”

- Advertisement -

“குறிப்பாக குக்கும்ப்ரா பந்தில் புத்திசாலித்தனமாக விளையாடும் ஒருவர் உங்களுக்கு தேவைப்பட்டது. எனவே இடது கை பேட்ஸ்மேனான அக்சர் படேல் அந்த சமயத்தில் மிகவும் முக்கியமானவர் என்று நாங்கள் கருதினோம். மேலும் மாலை நேரத்தில் நாங்கள் அதிகப்படியான விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க விரும்பியதால் ஒருவர் பொறுப்புடன் பேட்டிங் செய்வதை விரும்பினோம். எனவே அந்த முடிவில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அதே சமயம் அந்த முடிவு எங்களுக்கு மிகவும் முக்கியமாகவும் அமைந்தது”

“அந்த முடிவால் அக்சர் பட்டேல் நேற்று மாலையும் இன்று காலையும் சிறப்பாக செயல்பட்டு எடுத்த ரன்கள் முக்கியமானது. நீங்கள் 140 – 145 போன்ற சிறிய ரன்களை துரத்தும் போது ஒவ்வொரு ரன்னும் மிகவும் முக்கியமானதாகும். எனவே நிலைமையை புரிந்து கொண்டு அக்சர் படேல் பேட்டிங் செய்த விதம் அபாரமானது. அவருடைய இன்னிங்ஸ் எங்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றது” என்று கூறினார்.

இதையும் படிங்கAUS vs SA : 17.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸி வீரர், தெ.ஆ’வை சுருட்டி செய்த முதல் சம்பவம் – மும்பை ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

அதாவது அந்த சமயத்தில் விராட் கோலியை விட அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்படுவார் என்று கருதியதால் களமிறக்கப்பட்டதாக தெரிவிக்கும் புஜாரா 145 ரன்களை துரத்தும் போது 3வது நாள் மாலையும் 4வது நாள் காலையும் நிதானமாக பேட்டிங் செய்து 34 ரன்கள் குவித்த அவருடைய இன்னிங்ஸ் வெற்றியில் பங்காற்றியதாக பாராட்டினார். எனவே எதற்கெடுத்தாலும் அணி நிர்வாகத்தை விமர்சிக்காமல் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement