வீடியோ : 1 மணி நேரத்தில் கூடிய ரசிகர்கள், மெகா சிக்ஸரை பறக்க விட்டு மகிழ்வித்த தோனி – வியந்த ஹசி, ஸ்டைரிஸ், பீட்டர்சன்

MS Dhoni
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. அந்த போட்டிக்காக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த சில வாரங்களாக புதுப்புலியுடன் 40,000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் இப்போதிருந்தே சென்னை பங்கேற்கும் போட்டிகளுக்காக ஆவலுடன் டிக்கெட்டுகளை வாங்கி காத்திருக்கிறார்கள்.

குறிப்பாக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றின் மிகச் சிறந்த இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அந்த வகையில் கடைசியாக கடந்த வருடம் விளையாடியிருந்த அவர் தற்போது 41 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவரது ஆட்டத்தை பார்ப்பதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

தானா சேர்ந்த கூட்டம்:
மேலும் 4 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னையை 2வது வெற்றிகரமாக அணியாக ஜொலிக்க வைத்துள்ள தோனியை ஆரம்ப காலம் முதலே தல என்று கொண்டாடி வரும் தமிழக ரசிகர்கள் நீண்ட நாட்கள் கழித்து அவர் விளையாடுவதை நேரில் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகிறார்கள். அந்த நிலையில் மார்ச் 27ஆம் தேவையான நேற்று சென்னை அணியினர் எடுக்கும் பயிற்சிகளை ரசிகர்களை இலவசமாக கண்டு கழிக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு அறிவித்தது.

அதை அறிந்த ரசிகர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் பெரிய அளவில் சேப்பாக்கத்துக்கு திரண்டு சென்று பயிற்சி போட்டி துவங்கிய 6:00 மணிக்கு மைதானத்தை ஏறக்குறைய முழுமையாக நிரப்பினார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மொத்தமாக கூடி மிகப்பெரிய ஆதரவு கொடுத்த சென்னை ரசிகர்கள் தோனி களமிறங்கிய போது உச்சகட்ட ஆரவாரத்தை வெளிப்படுத்தி “தோனி தோனி” என்று முழங்கினார்கள். கடைசியாக 2019ஆம் ஆண்டு இதே போல பயிற்சி போட்டியில் தோனி களமிறங்கியதை சென்னை ரசிகர்கள் கொண்டாடியது உலக அளவில் வைரலானது மறக்கவே முடியாது.

- Advertisement -

கிட்டத்தட்ட அதே போலவே மீண்டும் அவர் களமிறங்கியது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் தோனிக்கு எப்போதும் மவுசு குறையாது என்பதை மீண்டும் நிரூபித்தது. குறிப்பாக அந்த வீடியோவை பார்த்த முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோரி தோனியிடம் இன்னும் அந்த மவுசு அப்படியே இருக்கிறது என்று ட்விட்டரில் பாராட்டினர். அப்படி தன்னை காண வந்த ரசிகர்களை பயிற்சி போட்டியிலேயே மெகா சிக்ஸரை பறக்க விட்ட தோனி மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கொண்டாட வைத்தார்.

அதை சைட் பகுதியில் நின்று கொண்டிருந்த பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி அண்ணாந்து பார்த்து கொடுத்த ரியாக்சன் சென்னை ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைத்தது. அப்படி சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் சென்னை அணியினர் இன்னும் ஒரு சில நாட்களில் அகமதாபாத் பயணித்து குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்க உள்ளனர். கடந்த வருடம் சுமாராக செயல்பட்டு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்த அந்த அணி இம்முறை அதிலிருந்து மீண்டெழுந்து 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : பாபர் அசாம் ஸ்ட்ரைக் ரேட் என்ன? ஏபிடி – கெயிலுடன் ஒப்பிட்ட முன்னாள் பாக் வீரரின் வாயை மூடிய சைமன் டௌல்

குறிப்பாக 41 வயதாகி விட்டதால் இந்த வருடத்துடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனியை வெற்றி கோப்பையுடன் விடை பெற வைக்க சென்னை அணி வீரர்கள் முழு மூச்சுடன் சிறப்பாக விளையாட தயாராகி வருகிறார்கள்.

Advertisement