பாபர் அசாம் ஸ்ட்ரைக் ரேட் என்ன? ஏபிடி – கெயிலுடன் ஒப்பிட்ட முன்னாள் பாக் வீரரின் வாயை மூடிய சைமன் டௌல்

- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் கடந்த 2017இல் அறிமுகமாகி 2019 வாக்கில் 3 விதமான கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அதனால் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியதால் விராட் கோலியை விட மிகச் சிறந்த வீரர் என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கொண்டாடினார்கள். ஆனால் நல்ல பேட்டிங், டெக்னிக் மற்றும் நிலையாக ரன்களை குவிக்கும் திறமை கொண்டுள்ள அவர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்நாட்டவர்களை அதிருப்தியை வைத்தது. அதிலும் குறிப்பாக அணியின் நலனை கருதி ஓபனிங் இடத்தை இளம் வீரர்களுக்கு விட்டுக்கொடுத்து மிடில் ஆர்டரில் விளையாடுமாறு ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படையாகவே விமர்சித்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து ஓப்பனிங் இடத்திலேயே விளையாடி வரும் அவர் 2023 பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டியில் சதமடிக்க வேண்டும் என்பதற்காக 80 ரன்களை தொட்டதும் மெதுவாக பேட்டிங் செய்தது இறுதியில் அவர் கேப்டன்ஷிப் செய்த பெஷாவர் அணி 240 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஸ்ட்ரைக் ரேட் என்ன:
அதனால் அணிக்காக விளையாடுங்கள் சதத்துக்காக விளையாடாதீர்கள் என்று நேரலையில் வர்ணனை செய்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் வெளிப்படையாகவே விமர்சித்தார். அதற்கு பாபர் அசாம் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் மோசமாக திட்டிய நிகழ்வுகளும் அதற்கு அவர் பதிலடி கொடுத்த நிகழ்வுகளும் அரங்கேறின. இந்நிலையில் பாகிஸ்தானின் நலனுக்காக சாய்ம் ஆயுப் – ஹாரீஸ் ஆகியோர் தொடக்க வீரராகவும் பாபர் அசாம் 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவின் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சைமன் டௌல் மீண்டும் நேரலையில் வர்ணனை செய்தார்.

இருப்பினும் அதை மறுத்த ஆமீர் சோஹைல் டி20 கிரிக்கெட்டில் ஸ்டிரைக் ரேட்டை விட பேட்டிங் சராசரி தான் முக்கியம் என்றும் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை விட பாபர் அசாம் சர்வதேச அளவில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளதாகவும் பதிலளித்தார். ஆனால் பாபர் அசாமின் சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட் என்ன? என்று சைமன் டௌல் கேட்ட பதில் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமீர் சோஹைல் பெட்டி பாம்பாக அடங்கி வாயை மூடிக் கொண்டார்.

- Advertisement -

ஏனெனில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 150.13 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ள ஏபி டீ வில்லியர்ஸ் சர்வதேச அளவில் 135.16 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார். அதே போல் மொத்தமாக 144.75 ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ள கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் 137.50 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார். ஆனால் மொத்தமாக 128.46 ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ள பாபர் அசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 127.80 என்ற தடவலான ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார். அதனாலயே அவரால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. இது பற்றி அந்த இருவரும் நிகழ்த்திய உரையாடல்கள் பின்வருமாறு.

சைமன்: பாபர் அசாம் 3வது இடத்தில் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வரக்கூடியவர். அவர் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு ஓப்பனிங் இடத்தில் விளையாட கூடாது. சாய்ம் மற்றும் ஹரீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாட வேண்டும்.
சோஹைல்: டி20 அணிகள் எப்போதும் பேட்டிங் சராசரியை வைத்தே தேர்வு செய்யப்படும் ஸ்ட்ரைக் ரேட்டை பொறுத்து அல்ல. அங்கே ஸ்ட்ரைக் ரேட்டை விட சராசரி தான் மிகவும் முக்கியம். நான் எப்போதும் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி கவலைப்படாமல் சராசரியை தான் பார்ப்பேன். குறிப்பாக ஏபிடி, கிறிஸ் கெயில் ஆகியோருடைய சர்வதேச டி20 ஸ்டிரைக் ரேட் 135 – 137 என்ற அளவில் தான் இருக்கிறது.

இதையும் படிங்க:IPL 2023 : கண்டிப்பா ரிஷப் பண்டை நேரில் பார்ப்பேன். ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக – கங்குலி வெளியிட்ட கருத்து

சைமன்: இல்லை. அது 158
சோஹைல்: யாருடையது?
சைமன்: கிறிஸ் கெயில். ஏபிடி’யின் ஸ்ட்ரைக் ரேட் 145
சோஹைல்: ஆனால் அவர்களுடைய சர்வதேச ஸ்ட்ரைக் ரேட் 137
சைமன்: சரி அப்படியானால் பாபர் அசாமுடையது என்ன

Advertisement