IPL 2023 : கண்டிப்பா ரிஷப் பண்டை நேரில் பார்ப்பேன். ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக – கங்குலி வெளியிட்ட கருத்து

Ganguly-and-Pant
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்ததன் காரணமாக தற்போது சிகிச்சைக்கு பின்னர் ஓய்வில் இருக்கிறார்.

Pant

- Advertisement -

இதனிடையே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி ரிஷப் பண்ட் இல்லாமல் விளையாடப்போவது அந்த அணிக்கு ஒரு பின்னடைவு தான் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்காததன் காரணமாக அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனால் இந்த ஆண்டு வாரனரின் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்க உள்ளது. ரிஷப் பண்டிற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக யார் விளையாடப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் டெல்லி அணி ரிஷப் பண்ட்டை தவறவிட்டாலும் இந்த தொடரில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் என டெல்லி அணியின் நிர்வாகம் கூறியுள்ளது.

pant

இந்நிலையில் ரிஷப் பண்டின் உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனருமான சவுரவ் கங்குலி அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரிஷப் பண்ட் இல்லாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உள்ள அனைவரும் வருத்தமாக இருக்கிறோம். நான் ரிஷப் பண்ட்டை கண்டிப்பாக விரைவில் நேரில் சென்று சந்திப்பேன். அவர் இல்லாமல் இந்திய அணியின் வீரர்களும் வருத்தமாக இருப்பார்கள். இருந்தாலும் ரிஷப் பண்ட் மிகவும் இளமையான வீரர் அதோடு கிரிக்கெட் மீது அவர் வைத்திருக்கும் ஆர்வம் நிச்சயம் அவரை மீண்டும் பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

இதையும் படிங்க : IPL 2023 : விராட் கோலியை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அவரு தங்கம்னு தெரிஞ்சிகிட்டேன் – மனம்திறந்த ஏபிடி

அவரது கிரிக்கெட் கரியரில் இன்னும் நிறைய காலம் உள்ளது. ரிஷப் பண்ட் சிறந்த வீரராக திகழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் அவரது உடல் நிலை முழுமையாக குணமடையும் வரை அவர் போதிய நேரத்தை எடுத்துக் கொண்ட பின்னர் தான் களத்திற்கு திரும்ப வேண்டும் என கங்குலி தனது கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement