IPL 2023 : விராட் கோலியை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அவரு தங்கம்னு தெரிஞ்சிகிட்டேன் – மனம்திறந்த ஏபிடி

ABD
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்நிலையில் அதற்கு தயாராகும் வகையில் தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு அணியும் தற்போது முழு வீச்சில் தங்களது அணி வீரர்களை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக தாங்கள் அணிய இருக்கும் ஜெர்சி வெளியீட்டு விழாவை பெங்களூரு அணி நடத்தியது.

RCB Faf Du Plessis

- Advertisement -

இந்நிலையில் பெங்களூரு அணிக்காக பல ஆண்டு காலமாக மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்த ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோரை பெங்களூர் அணி நிர்வாகம் நேரில் அழைத்து அவர்களது முன்னிலையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டிற்கான ஜெர்சி வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் “ஹால் ஆஃப் ஃபேம்” விருது வழங்கப்பட்டு அவர்கள் இருவரும் பயன்படுத்திய ஜெர்சி நம்பரை அதிகாரவபூர்வமாக ரிட்டையர்ட் செய்வதாக பெங்களூர அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஜெர்சி வெளியீட்டு விழாவிற்கு பின்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஏபிடி-யிடம் கிரிஸ் கெயில் ஒரு நேர்காணலை நடத்தினார்.

ABD

அந்த வகையில் அந்த பேட்டியின் போது விராட் கோலியை சந்தித்தபோது நடைபெற்ற நிகழ்வு மற்றும் விராட் கோலி உடனான உறவு குறித்த கேள்வியை கெயில் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஏபிடி : எனக்கு நிறைய நினைவுகள் பெங்களூரு அணியை சுற்றி இருக்கிறது. அதிலும் குறிப்பாக விராட் கோலியுடன் நான் அதிக நேரம் செலவிட்டுள்ளேன்.

- Advertisement -

அவரை முதல்முறையாக நான் பார்த்தபோது : மிகவும் துணிச்சல் வாய்ந்த ஒரு நபராக இருந்தார். அதே நேரம் திமிர் பிடித்தவர் ஆகவும் இருக்கிறாரே என்று தான் நினைத்தேன். குறிப்பாக அப்போது அவரது ஹேர் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த ஹேர் ஸ்டைல் அவருக்கு மிகவும் கெத்தாகவும் இருக்கும். இளமை துடிப்புடன் அப்போது கொஞ்சம் திமிராகவும் கோலி இருந்தார் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : அதுல அவருக்கு நிகர் யாருமே கிடையாது, விராட் கோலி – பாபர் அசாம் ஆகியோரில் பெஸ்ட் யார்? அப்துல் ரசாக் பேட்டி

ஆனால் நாட்கள் கடந்த பின்னர் நான் விராட் கோலியை பற்றி நன்கு புரிந்து கொண்ட சமயத்தில் தான் அவர் மீதான பார்வை எனக்கு மாறியது. சொல்லப்போனால் விராட் கோலி மீது மரியாதையும் கூடியது. அவர் ஒரு நல்ல வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட என்று ஏபிடி அந்த பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement