அதுல அவருக்கு நிகர் யாருமே கிடையாது, விராட் கோலி – பாபர் அசாம் ஆகியோரில் பெஸ்ட் யார்? அப்துல் ரசாக் பேட்டி

- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 34 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்து வருகிறார். மறுபுறம் பொதுவாகவே இந்தியாவை விட நாங்கள் தான் பெரியவர் என்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ள அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விராட் கோலியை விட தங்களது நாட்டைச் சேர்ந்த பாபர் அசாம் தான் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று சமீப காலங்களில் பேசி வருகிறார்கள்.

Babar-Azam-and-Virat-Kohli

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி ஃபார்மை இழந்து தவித்த 2019க்குப்பின் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்மேனாக முன்னேறிய பாபர் அசாம் நவீன கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தரமான வீரராகவும் அசத்தி வருகிறார். அதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று பேச துவங்கிய பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் டான் பிராட்மேன் ஆகியோரை விட வல்லவர் என்று கொண்டாடியதையும் பார்க்க முடிந்தது.

தவறான ஒப்பீடு:
ஆனால் தொடர்ந்து 10 வருடங்களாக அசத்தும் விராட் கோலியுடன் ஓரிரு வருடங்கள் மட்டுமே அசத்தி வரும் பாபர் அசாமை ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்பதே நிதர்சனமாகும். அதையே தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் இருவருமே திறமைகளில் கிட்டத்தட்ட சமமானவர்கள் என்றாலும் ஃபிட்னஸ் என்று வரும் போது பாபாரை விட விராட் கோலி பன்மடங்கு உலகத்தரம் வாய்ந்தவர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Babar-Azam-and-Virat-Kohli

“விராட் மிகச் சிறந்த அற்புதமான வீரர். தன்னுடைய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வது அவருடைய சிறந்த பண்பாகும். அவருடைய எண்ணங்கள் எப்போதும் நேர்மறையானது. அவர் தன்னுடைய திறமைகளை சிறப்பாக பயன்படுத்துகிறார். அவை அனைத்தையும் விட அவருடைய ஃபிட்னஸ் உலக தரம் வாய்ந்தது. ஆனால் பாபர் அசாமின் ஃபிட்னஸ் விராட் கோலிக்கு நிகரானதல்ல. எனவே பாபர் தன்னுடைய உடல் தகுதியில் சற்று கடினமாக உழைக்க வேண்டும். இருப்பினும் அவர் பாகிஸ்தானின் நம்பர் ஒன் வீரர்”

- Advertisement -

“சொல்ல போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் விராட் கோலி, பாபர் அசாம் போன்ற ஒரு தரமான வீரர் இருப்பார்கள். எனவே அவர்களை நாம் ஒப்பிடத் தேவையில்லை. இந்த ஒப்பீடு கபில் தேவ் அல்லது இம்ரான் கான் ஆகியோரில் யார் சிறந்தவர்? என்பதைப் போன்றதாகும். அதனால் இது போன்ற ஒப்பீடுகள் நல்லதல்ல”

Razzaq

“விராட் கோலி இந்தியாவின் மிகச் சிறந்த வீரர். அதே போல பாபர் அசாம் பாகிஸ்தானின் சிறந்த வீரர். விராட் கோலி உலகத்தரம் வாய்ந்தவர் என்பதைப் போலவே பாபர் அசாம் அதற்கு இணையானவர். ஆனால் பாபாரை விட ஃபிட்னஸ் என்று வரும் போது விராட் கோலி பன்மடங்கு உயர்ந்து நிற்கிறார்” என கூறினார். முன்னதாக கேப்டனாக அதிரடியாக விளையாடிய வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட பாபர் அசாம் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இதையும் படிங்க:திடீரென காணாமல் போன இந்திய வீரர் கேதர் ஜாதவின் தந்தை – மாபெரும் உதவி செய்த ரோஹித் ரசிகை? நடந்தது என்ன

அதனால் உங்களது ஓப்பனிங் இடத்தை அணியின் நலனுக்காக இதர வீரர்களுக்கு கொடுத்து விட்டு மிடில் ஆர்டரில் விளையாடுமாறு வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் வீரர்கள் கொடுத்த அறிவுரையை ஏற்க மறுத்த பாபர் அசாம் தொடர்ந்து அதே இடத்தில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது அந்நாட்டில் நிறைய விமர்சனங்கள் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement