வீடியோ : இப்டியா இருப்பிங்க? கவனக்குறைவால் பாதி வெற்றியை கோவையிடம் கோட்டை விட்ட சேலம் – நடந்தது என்ன?

Run OUt
- Advertisement -

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 27ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு சேலத்தில் இருக்கும் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 79 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் கோவை கிங்ஸ் தோற்கடித்து அபார வெற்றி கண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேலம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கோவை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 199/8 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

அந்த அணிக்கு டாப் ஆர்டரில் சுஜய் 6 பவுண்டரியுடன் 44 (32) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் 6 பவுண்டரியுடன் 41 (28) ரன்களும் எடுத்தனர். மேலும் மிடில் ஆர்டரில் அதீக் உர் ரஹ்மான் 31 (18) ரன்கள் எடுத்ததை விட கடைசி நேரத்தில் சரவெடியாக விளையாடிய ராம் அரவிந்த் 2 பவுண்டரியும் 5 சிக்சரும் பறக்க விட்டு 50* (22) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட சேலம் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சேலத்தின் கவனக்குறைவு:
அதை தொடர்ந்து 200 என்ற கடினமான இலக்கை துரத்திய சேலம் ஆரம்பம் முதலே திண்டாட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி கோவையின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19 ஓவரில் 120 ரன்களுக்கு சுருண்டு சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சன்னி சந்து 29 (19) ரன்கள் எடுக்க கோவை சார்பில் அதிகபட்சமாக தரமணி கண்ணன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவைக்கு அபிஷேக் தன்வர் வீசிய 3வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட சுஜய் சிங்கிள் எடுக்க ஓடினார்.

அப்போது பந்தை எடுத்த சேலத்தின் ஃபீல்டர் ஸ்டம்ப்களை நோக்கி மிகச் சரியாக குறி பார்த்து எறிந்தார். அதை பார்த்துக் கொண்டே ஓடிவந்த சுஜய் கிட்டத்தட்ட வெள்ளைக் கோட்டை நெருங்கிய போது பந்தை தடுக்கக் கூடாது என்ற விதிமுறைக்கு மதிப்பளித்து தாவி வழி விட்டார். அதன் காரணமாக சரியாக ஸ்டம்ப்புகளில் பந்து அடித்ததால் சேலம் அணியினர் அவுட் கேட்பார்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுஜய் வெள்ளைக்கோட்டை தொட்டிருப்பார் என்று தங்களுக்கு தாங்களே கருதி ரிவ்யூ எடுக்காமல் விட்டனர்.

- Advertisement -

பொதுவாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை தொட்டு ஒரு அடி உள்ளே வந்தாலும் எதிரணியினர் அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவுட் கேட்பது வழக்கமாகும். அதே போல நவீன டெக்னாலஜி இருக்கும் போது ரன் அவுட் வாய்ப்புகள் தவறு விடக்கூடாது என்ற நோக்கத்தில் நடுவர்களும் அதை ஏற்று 3வது நடுவரின் உதவியை நாடுவது சகஜமாகும். அப்படிப்பட்ட நிலையில் பெயருக்கு கூட அவுட் கேட்காத சேலம் அணியினர் அமைதியாக அடுத்த பந்தை வீசினர்.

ஆனால் பெரிய திரையில் அதை வர்ணனையாளர்கள் மீண்டும் பார்த்த போது வெள்ளைக்கோட்டை நோக்கி ஓடிவந்த சுஜய் க்ரீஸை தொடாமலேயே காற்றில் தாவிய போது பந்து நேராக சென்று ஸ்டம்புகளில் அடித்தது தெளிவாக தெரிந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் சுஜய் உடல் பகுதிகள் அல்லது அவருடைய பேட் என எதுவுமே வெள்ளைக்கோட்டை தொடாமல் காற்றில் இருந்ததால் அது தெளிவான அவுட் என்று தெரிய வந்தது. அப்படி இருந்தும் கவனக் குறைவால் அதை ஏன் எடுக்கவில்லை என வரணையாளர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க:TNPL 2023 : ராம் அரவிந்த் அதிரடி, சொந்த மண்ணில் நொறுங்கிய சேலம் – சேப்பாக், திண்டுக்கலுக்கு சவால் விடும் கோவை பிளே ஆஃப் சென்றதா?

ஒருவேளை சுஜய் 7 ரன்களில் இருந்த போது கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்தி சேலம் அவுட் செய்திருந்தால் எக்ஸ்ட்ரா 37 ரன்கள் எடுத்திருக்க முடியாது. மேலும் அந்த அழுத்தம் அடுத்து வரும் பேட்ஸ்மேன்ன்கள் அதிரடியாக விளையாடுவதை குறைத்திருக்கும். அத்துடன் பந்து வீச்சில் உத்வேகத்துடன் வீசி இன்னும் சற்று குறைவான ரன்களை கொடுத்து எக்ஸ்ட்ராவாக வெற்றிக்கு போராடுவதற்கு சேலத்திற்கு உதவியிருக்கலாம்.

Advertisement