108 மீட்டர் முரட்டு சிக்சரை பறக்க விட்டு பவரை காட்டிய ரசல் – ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த லாஸ் ஏஞ்சல்ஸ்

- Advertisement -

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 19ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு டாலஸ் நகரில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் சுனில் நரேன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி மேத்தியூ வேட் அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் மறுபுறம் 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட ஃபின் ஆலன் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 20 (19) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் மேத்தியூ வேட் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்த நிலையில் அடுத்ததாக வந்து தனது பங்கிற்கு அதிரடி காட்டிய மார்க்கஸ் ஸ்டோனிஸ் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 (18) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட மேத்தியூ வேட் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 78 (41) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோரி ஆண்டர்சன் 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு முக்கியமான 39 (20) ரன்கள் எடுக்க ஆரோன் பின்ச் 12* (10) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

நைட் ரைடர்ஸ் ஹாட்ரிக் தோல்வி:
அதனால் 20 ஓவர்களில் சான் பிரான்சிஸ்கோ 212/7 ரன்கள் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 213 ரன்களை துரத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு முதல் 5 ஓவர்களிலேயே அதிரடியாக 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கம் கொடுத்த ஜேசன் ராய் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 45 (21) ரன்கள் எடுத்து ஹாரீஸ் ரவூப் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் மறுபுறம் சற்று மெதுவாகவே விளையாடிய உமுக்த் சந்த் 20 (17) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

போதாகுறைக்கு அடுத்ததாக வந்த நிதீஷ் குமார் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (23) ரன்களிலும் ரிலீ ரோசவ் 8 (8) ரன்களிலும் ஜஹாங்கீர் மல்கோத்ரா 7 (8) அவுட்டாகி மிடில் ஓவர்களில் அழுத்தத்தை உண்டாக்கினர். அதனால் கடைசி 7 ஓவர்களில் 97 ரன்கள் தேவைப்பட்ட அந்த அணிக்கு ரன் ரேட் எகிறிய போது நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

குறிப்பாக தன்னுடைய காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்தி டெத் ஓவர்களில் எதிரணி பவுலர்களைப் பந்தாடிய அவர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் முரட்டுத்தனமான சிக்சரை பறக்க விட்டார். அவர் கொடுத்த பவர் காரணமாக 108 மீட்டர் பறந்த பந்து ரசிகர்களையும் ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் அடுத்த 3 பந்துகளில் ரன்கள் எடுக்க முடியாத அவர் 5வது பந்தில் சிக்ஸர் அடித்து கடைசி பந்தில் சிங்கிள் எடுத்தார்.

அதனால் மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்ட போது ரசல் அதிரடி காட்ட முடியாத நிலையில் சுனில் நரேன் 2 சிக்ஸர்களை மட்டுமே அடித்தார். அதனால் 20 ஓவர்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை 191/5 ரன்களுக்கு கட்டுப்படுத்திய சான் பிரான்சிஸ்கோ 21 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் ஆரம்பம் முதலே கட்டுக்கோப்புடன் செயல்பட்ட அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சடாப் கான் 2 விக்கெட்களை எடுத்தார்.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

மறுபுறம் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு ரசல் பவுண்டரி 4 சிக்ஸசருடன் 42* (26) ரன்களும் சுனில் நரேன் 3 சிக்சருடன் 28* (17) ரன்கள் எடுத்தும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இதனால் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த லாஸ் ஏஞ்சல்ஸ் இந்த தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது. மறுபுறம் பங்கேற்ற 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த சான் பிரான்சிஸ்கோ புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement