இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் தற்போது இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனைத்தொடர்ந்து நாளை ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி காத்திருக்கிறது.
இந்நிலையில் நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று தெரிவித்திருந்த வேளையில் நாளைய போட்டியில் எப்படி அணித்தேர்வு இருக்கும்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்குவது உறுதி. மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லுக்கு பதிலாக அறிமுக வீரராக ருதுராஜ் கெய்க்வாட் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.
நான்காவது இடத்தில் விராட் கோலியும், ஐந்தாவது இடத்தில் ரஹானேவும் இறங்குவார்கள். ஆறாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், ஏழாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனும், எட்டாவது இடத்தில் அஸ்வின் களமிறங்குவார். ஒன்பதாவது இடத்தில் ஷர்துல் தாகூரும், பத்தாவது இடத்தில் ஜெயதேவ் உனட்கட்க்கு பதிலாக முகேஷ் குமார் அறிமுகமாக வாய்ப்புள்ளது. 11-வது இடத்தில் சிராஜ் விளையாடுவார். அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : 2வது வெ.இ டெஸ்டில் மாபெரும் சாதனையை படைக்கப் போகும் விராட் கோலி – சச்சின், தோனி, டிராவிட்டால் முடியாததை செய்வாரா?
1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில்/ருதுராஜ் கெய்க்வாட், 4) விராட் கோலி, 5) அஜின்க்யா ரஹானே, 6) ரவீந்திர ஜடேஜா, 7) இஷான் கிஷன், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) ஷர்துல் தாகூர், 10) ஜெயதேவ் உனட்கட்/முகேஷ் குமார், 11)முகமது சிராஜ்.