2வது வெ.இ டெஸ்டில் மாபெரும் சாதனையை படைக்கப் போகும் விராட் கோலி – சச்சின், தோனி, டிராவிட்டால் முடியாததை செய்வாரா?

Sachin Dhoni Virat Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. டாமினிக்கா நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் துறையில் யசஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகப் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்று ஏராளமான சாதனைகள் படைத்த நிலையில் பந்து வீச்சு துறையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தம் 12 விக்கெட்டுகளை சாய்த்து வெஸ்ட் இண்டீஸை இரண்டரை நாள்களில் சுருட்டுவதற்கு உதவினார்.

Virat Kohli

- Advertisement -

அதே போல ரோஹித் சர்மா 103 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 20ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது. அப்போட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் அங்குள்ள குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை துவக்கியுள்ளனர்.

விராட் கோலியின் சாதனை:
முன்னதாக முதல் போட்டியில் விளையாடிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளில் அங்கமாக இருந்த 2வது இந்திய வீரர் (296) என்ற எம்எஸ் தோனியின் (295) சாதனையை உடைத்து முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை (307) முந்துவதற்கு தயாராகியுள்ளார். இந்நிலையில் அதற்கு முன்பாகவே இந்த 2வது போட்டியில் களமிறங்கும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற மற்றுமொரு மாபெரும் மைல்கல் சாதனையை படைக்க உள்ளார்.

virat kohli 166

கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு 2013 முதல் கடந்த 10 வருடங்களாக பெரும்பாலான போட்டிகளில் உலகின் டாப் பவுலர்களை எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 16 வருடங்களாக 110 டெஸ்ட், 214 ஒருநாள், 115 டி20 என இதுவரை மொத்தமாக 499 சர்வதேச போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள விராட் கோலி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தன்னுடைய 500வது போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதற்கு முன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் (664) விளையாடிய வீரராக சரித்திர சாதனை படைத்துள்ள நிலையில் 2வது இடத்தில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும் (535) 2வது இடத்தில் தற்போதைய பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் (504) இருக்கின்றனர். பொதுவாக இது போன்ற மைல்கள் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது மற்றுமொரு சாதனையாக அமையும் என்றாலும் அதில் அசத்துவது சவாலான ஒன்றாகும்.

Virat Kohli Sachin tendulkar MS Dhoni

அதனாலேயே 90 வருட இந்திய கிரிக்கெட்டில் சச்சின் உட்பட யாருமே தங்களுடைய 100வது டெஸ்ட் போட்டியில் சதமடிக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் சச்சின் டெண்டுல்கர் 35, ஜெயவர்த்தனே 11, குமார் சங்கக்காரா 48, சனாத் ஜெயசூர்யா 1, ரிக்கி பாண்டிங் 44, எம்எஸ் தோனி 32*, ஷாஹித் அப்ரிடி 22, ஜேக் காலிஸ் 6, ராகுல் டிராவிட் 2 என இதற்கு முன் தங்களுடைய 500வது போட்டியில் விளையாடிய எந்த ஜாம்பவான் வீரர்களும் அரை சதம் கூட அடித்ததில்லை.

இதையும் படிங்க:சூரியகுமார் 32 வயசு தான் , ஆனா நான் 22 வயசுலயே பாகிஸ்தானின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனா இருப்பேன் – இளம் வீரர் அதிரடி

அப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய 100வது போட்டியில் 66, 200வது போட்டியில் 49, 300வது போட்டியில் 4, 400வது போட்டியில் 0 என குறைந்த ரன்களையே எடுத்துள்ள விராட் கோலி 500வது போட்டியில் சதமடித்து சச்சின் முதல் தோனி வரை வேறு யாரும் படைக்காத சரித்திர சாதனையை செய்வாரா என்பதே அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement