போன முறையே நாம தோக்க இதுதான் காரணம். அந்த தப்பை மட்டும் செய்யாதீங்க – வாசிம் ஜாபர் அட்வைஸ்

Jaffer
- Advertisement -

இந்திய அணி இதுவரை ஏழு முறை தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இந்த ஏழு தொடரில் ஒரு முறை கூட நம்மால் அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை. ஆறு முறை தென்ஆப்பிரிக்கா அணியும், ஒரு முறை தொடரானது சமநிலையிலும் முடிந்துள்ளது. இந்நிலையில் இம்முறை நடைபெறவுள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தனது அறிவுரைகளை வழங்கியுள்ளார். கடைசியாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்திருந்தது.

- Advertisement -

இந்திய அணியானது இருபத்தி ஒன்பது ஆண்டுகளாக தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் முக்கிய ஒரு விடயத்தை செய்தாக வேண்டும் என்று ஜாபர் கூறுகையில் : இந்திய அணி நிச்சயம் ஏழு பேட்ஸ்மேன்கள் மற்றும் நான்கு பவுலர்களுடன் களம் இறங்க வேண்டும். அப்படி களமிறங்கும் பட்சத்தில் தான் இந்திய அணியால் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த முடியும்.

பவுலிங்கை பொருத்தவரை பும்ரா, ஷமி, சிராஜ் மற்றும் அஷ்வின் ஆகியோர் போதுமானவர்கள் தான். ஆனால் பேட்டிங்கில் 7 பேரை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் 2018 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 6 இன்னிங்ஸ்களில் ஒரு முறை மட்டுமே இந்திய அணி 250 ரன்களை கடந்தது .தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணிக்கு பேட்டிங் வீக்னஸ் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி. சாமர்த்தியமான பதிலை அளித்த – ராகுல் டிராவிட்

எனவே நிச்சயம் 7 பேட்ஸ்மேன்கள் உடன் தான் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார். கடந்த முறை 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் கொண்ட விகிதத்தில் களமிறங்கியே இந்திய அணி தோல்வியை சந்தித்ததாக குறிப்பிட்டுளளார்.

Advertisement