விராட் கோலி குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி. சாமர்த்தியமான பதிலை அளித்த – ராகுல் டிராவிட்

Dravid
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது இந்திய வீரர்கள் நாளைய போட்டிக்காக தயாராகி உள்ளனர். இந்நிலையில் நாளைய போட்டியை எதிர் கொள்வதற்கு முன்னர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். கடந்த சில வாரங்களாகவே இந்திய அணி குறித்தும், இந்திய அணி நிர்வாகம் குறித்தும் பல்வேறு விடயங்கள் வெளியாகி சர்ச்சையாக மாறி வருகின்றன.

ind

- Advertisement -

இந்நிலையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் டிராவிட் ஏதாவது பேசி சர்ச்சையாகி விடுமோ என்று நினைத்த வேளையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ராகுல் டிராவிட் மிகவும் நேர்த்தியாக கையாண்டார். நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சாமர்த்தியமான பதில் அளித்த டிராவிட் இந்திய அணியில் ரஹானேவின் இடம் குறித்தும் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரஹானே இந்திய அணியில் ஒரு அனுபவமிக்க வீரர். அவர் இந்திய அணிக்காக நிறைய பங்களிப்பை அளித்துள்ளார். அவர் எப்போதுமே அணியின் ஒரு அங்கம் தான். அவருக்கு நான் துணை நிற்பேன் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு டிராவிடை சீண்டும் விதமாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது விராட் கோலி ஒருநாள் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ராகுல் டிராவிட் ஏதாவது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் பெரிய விஷயமாகி விடும் என்று நினைத்த வேளையில் அதனை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்ட டிராவிட் இதுகுறித்து கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன்களை நியமிப்பது எல்லாம் தேர்வுக் குழுவின் பணி தான்.

dravid agarwal

ஏனெனில் அவர்கள் தான் இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடும். மேலும் ஒவ்வொரு பிரிவிற்கும் கேப்டனை நியமிப்பது அவர்களுடைய ஆலோசனைக்குப் பின்னர் தான் நடைபெறும். நான் வீரர்களிடம் டிரெஸ்ஸிங் ரூமில் என்ன பேசுகிறேன் என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது என்று அசத்தலான பதிலளித்தார். மேலும் விராட் கோலி குறித்து தொடர்ந்து புகழ்ந்து பேசிய அவர்: கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது நான் அவருடன் அணியில் விளையாடி உள்ளேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது – தெனாவட்டாக பேசிய தெ.ஆ கேப்டன்

அதன் பிறகு அவர் தற்போது 10 ஆண்டுகளை கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய வளர்ச்சி அபரிவிதமான ஒன்று. மிகப் பெரிய வீரராக தற்போது மாறியுள்ள கோலி அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் உத்வேகம் கொடுக்கிறார். ஒரு கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement