இந்தியா நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது – தெனாவட்டாக பேசிய தெ.ஆ கேப்டன்

Elgar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த டெஸ்ட் தொடரில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த வேளையில் தற்போது திட்டமிட்டபடி முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் கைப்பற்றியதே இல்லை என்கிற காரணத்தினால் இம்முறை இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsRSA

- Advertisement -

அதன்படி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் இந்த தொடர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இம்முறை நடைபெறவுள்ள இந்த தொடரானது இரு அணிகளுக்குமே மிகவும் சவாலான ஒரு தொடராக இருக்கும். சர்வதேச அளவில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிலநேரங்களில் அவர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஒரு கிரிக்கெட் ரசிகனாக நான் இதை சொல்கிறேன்.

nortje1

கடைசி சில போட்டிகளில் அவர்கள் செயல்பட்டதை வைத்து அவர்களின் திறமையை மதிப்பிட முடியாது. ஏனெனில் நாங்கள் எங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறோம். அது எங்களுக்கு கூடுதல் பலத்தை தரும். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் சக்ஸசை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நாளைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – முக்கிய வீரருக்கு இடமில்லை

ஆனால் எங்களுடைய அணியின் பந்து வீச்சாளர்களும் சம பலத்துடன் இருக்கின்றனர். எங்களுடைய பவுலர்களின் பலத்தை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இம்முறையும் இந்திய அணியை வீழ்த்த நாங்கள் போராடுவோம் என்று டீன் எல்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement