நாளைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – முக்கிய வீரருக்கு இடமில்லை

IND
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது இல்லை என்கிற காரணத்தினால் இம்முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க இந்திய அணி உத்வேகமாக இருக்கிறது.

IND

- Advertisement -

அதே வகையில் இந்திய அணியிடம் தோல்வி அடையக்கூடாது என்று தென் ஆப்பிரிக்க அணியும் தங்களது போராட்டத்தை அளிக்கும். அந்த வகையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை துவங்க உள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் தற்போது அதிகரித்துள்ளது.

ஏனெனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணி எத்தனை பேட்ஸ்மேன்கள் மற்றும் எத்தனை பவுலர்களுடன் களம் இறங்கப் போகிறது? இந்த காம்பினேஷனில் களமிறங்கப்போகிறது? என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. அதற்கு விடையாக தற்போது இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் கணிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jayant

மேலும் ரஹானேவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பந்துவீச்சாளர்களை பொருத்தவரை ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்காது என்றும் அனுபவ வீரரான இஷாந்த் ஷர்மா அணியில் நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பும்ரா, ஷமி, அஷ்வின், சிராஜ் ஆகிய நால்வரும் விளையாடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா தென்னாப்பிரிக்கா தொடர் இதுவரை : அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் – லிஸ்ட் இதோ

1) மாயங்க் அகர்வால், 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ரிஷப் பண்ட், 7) அஷ்வின், 8) ஷமி, 9) பும்ரா, 10) இஷாந்த் சர்மா, 11) சிராஜ்

Advertisement