இந்தியா தென்னாப்பிரிக்கா தொடர் இதுவரை : அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் – லிஸ்ட் இதோ

Kohli IND vs Sa
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் படைக்கப்பட்ட சாதனைகள் குறித்த விவரங்களை நாங்கள் உங்களுக்காக இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இதுவரை 39 டெஸ்டில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

INDvsRSA

- Advertisement -

அதில் 14 முறை இந்திய அணியும், 15 வரை தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளன. 10 முறை போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையே 14 டெஸ்ட் தொடர் நடைபெற்று உள்ளது. இதில் இந்தியா நான்கு முறையும், தென்னாப்பிரிக்காவில் 7 முறையும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றுமுறை தொடர் சமநிலையில் முடிந்துள்ளது.

அதேபோன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்கள் 643 ரன்களாக இருக்கிறது. அதே போன்று இந்திய அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 620 ரன்கள் குவித்துள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக 459 ரன்களும், குறைந்தபட்ச ஸ்கோராக 66 ரன்களும் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் திகழ்கிறார்.

Sehwag

மொத்தம் 25 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1741 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜாக் காலிஸ் 1734 ரன்களை குவித்துள்ளார். ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரராக சேவாக் 319 ரன்கள் சென்னை டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கோலி 254 ரன்களும், அசிம் ஆம்லா 253 ரன்களும் குவித்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : 1983 உலக கோப்பை அணி வீரர்களுக்கு 15 கோடி ரூபாய் வழங்கிய 83 படக்குழு – எதற்கு தெரியுமா?

இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோர் 7 சதங்கள் அடித்து அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக அணில் கும்ப்ளே தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக டேல் ஸ்டெயின் 65 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement