1983 உலக கோப்பை அணி வீரர்களுக்கு 15 கோடி ரூபாய் வழங்கிய 83 படக்குழு – எதற்கு தெரியுமா?

83-jeeva
- Advertisement -

1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற அந்த தருணத்தை கருவாக வைத்து அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் 83. பிரபல பாலிவுட் ஹீரோவான ரன்வீர் சிங் இப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோன்று தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்து இருக்கிறார். அன்மையில் வெளியான இந்த 83 படத்திற்கான ட்ரெய்லர் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

83

- Advertisement -

கடந்த பல மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இத்திரைப்படமானது நேற்று வெளியாகிய நிலையில் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தினை காண ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இவ்வேளையில் 1983-ஆம் ஆண்டு உலககோப்பை அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு 83 படக்குழு சார்பாக சுமார் 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் கபில் தேவுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ranveer

இப்படி இந்த உலககோப்பை அணிக்கு பதினைந்து கோடி ரூபாய் வழங்கப்பட என்ன காரணம் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான தகவலில் கூறப்பட்டதாவது : உண்மைக்கதையை தழுவி இந்த திரைப்படம் உருவான காரணத்தினால் அந்த கதாபாத்திரங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கான உரிம தொகையை வழங்க வேண்டும். அப்படித்தான் 83 திரைபடக்குழு சார்பாக இந்த தொகையானது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பேட்டிங்கிற்கு லாரா, பவுலிங்கிற்கு ஸ்டெயின் – ஜாம்பவான் வீரர்களை கோச்சாக நியமித்த ஐ.பி.எல் அணி – எது தெரியுமா?

அதன்படி மொத்த அணிக்கும் 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள வேளையில் இத்திரைப்படத்தில் அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள கபில் தேவ் கதாபாத்திரத்திற்காக அவருக்கு அதிகபட்சமாக 5 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement