பேட்டிங்கிற்கு லாரா, பவுலிங்கிற்கு ஸ்டெயின் – ஜாம்பவான் வீரர்களை கோச்சாக நியமித்த ஐ.பி.எல் அணி – எது தெரியுமா?

Lara
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கிய ஐ.பி.எல் தொடரானது அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த தொடரோடு சேர்த்து 14-சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 15-ஆவது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் ஏப்ரல் மாதம் துவங்க உள்ள இந்த ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றிருந்த 8 அணிகளும் தங்களது அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளும் தற்போது தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியை வழிநடத்த இருக்கும் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், சப்போர்ட் ஸ்டாப்ஸ் என பலரையும் தேர்வு செய்து வருகிறது.

- Advertisement -

அந்தவகையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் முறைப்படி தங்களது பயிற்சியாளர் மற்றும் சப்போர்ட் ஸ்டாப் குழுவினை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதில் முதன்மை பயிற்சியாளராக டாம் மூடி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல துணை பயிற்சியாளராக சைமன் கேடிச் செயல்பட இருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் ஒரு பெரிய பிரபல ஜாம்பவான் பட்டாளத்தையே சன்ரைசர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடருக்காக நியமித்திருக்கிறது.

அதன்படி பேட்டிங் பயிற்சியாளராக லாராவும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெயினும் அணியில் இணைந்துள்ளனர். அதேபோன்று பீல்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் ஹேமங் பதானியும், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரனும் இணைந்துள்ளனர். இப்படி பயிற்சியாளர் மற்றும் சப்போர்ட் ஸ்டாப் குழுவில் மட்டும் ஆறு ஜாம்பவான்கள் இணைந்துள்ளதால் இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 1983 உ.கோ ஜெயித்த பிறகு வெறும் வயிற்றுடன் படுத்து தூங்கிய இந்திய வீரர்கள் – கபில் தேவ் பகிர்ந்த தகவல்

15 ஆவது சீசனுக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன், உம்ரான் மாலிக் மற்றும் அப்துல் சமாத் ஆகிய மூன்று வீரர்கள் அந்த அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement