1983 உ.கோ ஜெயித்த பிறகு வெறும் வயிற்றுடன் படுத்து தூங்கிய இந்திய வீரர்கள் – கபில் தேவ் பகிர்ந்த தகவல்

kapil
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டு முதல் முறையாக கபில்தேவ் தலைமையில் பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அப்படி இந்திய அணி முதல் முறை கோப்பையை வென்ற அந்த தருணத்தை அடிப்படையாக கொண்டு தற்போது பாலிவுட் நட்சத்திரங்களை வைத்து ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த 83 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னர் அந்த உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களுக்கு என தனியாக ஒரு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

kapildev

அந்த திரைப்படத்தை கண்டுகளித்த பின்னர் கபில்தேவ் அப்போது நடைபெற்ற சில நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அன்றைய நாளின் இரவில் இந்திய வீரர்கள் யாரும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றனர் என ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் அன்றைய போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை கையில் ஏந்தியதும் மிகப் பெரும் உற்சாகத்தில் இருந்தோம். ஒருவரை ஒருவர் வாழ்த்தி எங்களது மகிழ்ச்சியும் பகிர்ந்து கொண்டோம். மேலும் எங்களது வெற்றிக்கொண்டாட்டமானது மைதானத்தை தாண்டி நள்ளிரவு வெகுநேரம் பார்ட்டி என கோலாகலமாக சென்றது. அதன்பின்னர் எல்லாரும் பார்ட்டியை முடித்து சாப்பிடலாம் என்று சென்று அமர்ந்தோம்.

1983

அப்போது வெகுநேரம் ஆகிவிட்ட காரணத்தினால் ரெஸ்டாரன்ட் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது என்று தெரிந்தது. அந்த அளவிற்கு அன்றைய நாளின் நள்ளிரவு வரை நாங்கள் எங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்ததால் அன்று இரவு இந்திய வீரர்கள் யாருமே சாப்பிடாமல் உறங்கச் சென்றனர். ஆனாலும் நாட்டிற்கே பெருமை சேர்த்த அந்த தருணத்தை எண்ணி உலக கோப்பையை வென்ற அதே மகிழ்ச்சியில் நாங்கள் எந்தவித கஷ்டமும் இன்றி நன்றாக உறங்கினோம்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் மறுபடியும் டெஸ்ட் டீம்ல ஆடுவேனு நெனச்சிகூட பாக்கல. ஆனா இப்போ – பூரித்துப்போன கே.எல் ராகுல்

அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று கபில்தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள இந்தப் படமானது நேற்று டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement