நான் மறுபடியும் டெஸ்ட் டீம்ல ஆடுவேனு நெனச்சிகூட பாக்கல. ஆனா இப்போ – பூரித்துப்போன கே.எல் ராகுல்

Rahul
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை தனது இடத்தை உறுதிப்படுத்தாமல் நிரந்தர இடமின்றி விளையாடிவந்த கே.எல் ராகுல் தற்போது நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அளவிற்கு ராகுலின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வருஷம் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் இழந்த இடத்தை மீட்க முடியுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடர் அவரது இடத்தை மீட்டுத் தந்தது என்று கூறலாம்.

Rahul-1

- Advertisement -

ஏனெனில் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று ஓரங்கட்டப்பட்ட வேளையில் ராகுல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவே அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இங்கிலாந்து தொடரில் 4 போட்டிகளில் 315 ரன்கள் குவிக்க மீண்டும் தனது டெஸ்ட் இடத்தினை உறுதி செய்தார்.

அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித்துக்கு காயம் ஏற்படவே தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் ராகுல் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இப்படி தான் டெஸ்ட் அணிக்கு திரும்பியது மற்றும் துணைக்கேப்டன் பதவி ஆகியவற்றை குறித்தும் ராகுல் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rahul

ஒரு ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு வருடத்திற்கு முன்னரோ இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் அனைத்து விடயங்களும் வெகுவிரைவாக மாறியுள்ளது. இதை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அதோடு சேர்ந்து எனக்கு துணை கேப்டன் பதவியும் இந்த தொடரில் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 5 பவுலர்களுடன் ஆடினால் இவரை 5 ஆவது பவுலராக சேருங்க. நல்லா பேட்டிங் பண்ணுவாரு – எம்.எஸ்.கே பிரசாத்

இந்த பதவிக்காக என்னுடைய பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. நிச்சயம் நான் இந்திய அணிக்காக என்னுடைய பெஸ்ட்டை எப்போதுமே வழங்கிக் கொண்டே இருப்பேன் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு இதே போன்ற பாக்ஸிங் டே போட்டியில்தான் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக ராகுல் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement