கழற்றி விட்டாங்கன்னு யார் சொன்னா.. 2024 டி20 உ.கோ இந்திய அணியில் இடம் கிடைக்காதது பற்றி ரிங்கு

Rinku Singh 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக அடுத்தடுத்து 5 சிக்சர்களை அடித்த அவர் அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தமக்கு கிடைத்த பெரும்பாலான போட்டிகளில் மிகச் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினார்.

அதனால் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் இந்தியாவுக்கு கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அசத்திய அவர் 11 இன்னிங்ஸில் 356 ரன்களை 176.24 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். எனவே இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் இல்லாத குறையை போக்குவதற்காக ரிங்கு சிங் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் அவர் 11 இன்னிங்ஸில் 168 ரன்களை மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

ரிங்குவின் கனவு:
அந்த காரணத்தால் முதன்மை அணியிலிருந்து அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு கண்துடைப்புக்காக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டும் தேர்ந்தெடுத்தது. அதனால் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் காத்திருந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக ரிங்கு சிங் அப்பா ஏமாற்றத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜூனியர் கிரிக்கெட்டில் மட்டுமே சாதித்துள்ள தாம் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதையும் சாதிக்காததால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்.

அத்துடன் இப்போதும் ரிசர்வ் வீரராக இருப்பதால் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பின் அதை கையில் ஏந்தி முத்தமிடும் வாய்ப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் ரிங்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் விளையாடியது முதல் நான் ஜூனியர் அளவில் மட்டுமே சில கோப்பைகளை வென்றுள்ளேன். சீனியர் அளவில் எதையும் வெல்லவில்லை”

- Advertisement -

“இப்போதும் நான் உலகக் கோப்பைக்கு செல்ல உள்ளேன். அதை நாம் வெல்வோம் என்று நம்புகிறேன். அதை வென்ற பின் நான் கோப்பையை கையில் தூக்குவேன் என்று நம்புகிறேன். என்னுடைய நாட்டுக்காக மிகப்பெரிய கோப்பையை வென்று அதை கையில் தூக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும். மீண்டும் என்னால் விளையாட முடியுமா என்று நான் அனைத்து நேரமும் ஆச்சரியப்படுவேன்”

இதையும் படிங்க: அவரோட காலில் விழுந்து கும்பிடாததால் சான்ஸ் கிடைக்கல.. அன்னைக்கு முடிவு பண்ணேன்.. கம்பீர் பேட்டி

“எனவே அடுத்த முறை சிறப்பாக விளையாடுவதற்கு நான் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அந்த 5 சிக்சர்கள் அடித்த பின்பு என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. அதனால் விளம்பரங்கள் கிடைக்கிறது. பலரும் என்னை அடையாளம் கண்டு கொல்கின்றனர். அதனால் தனியாக என்னால் செல்ல முடியவில்லை. அந்த வகையில் வாழ்க்கையில் ஏதோ செய்துள்ளேன் என்று நான் உணர்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement