IND vs AUS : ஆஸ்திரேலிய தொடருக்கான பிட்சை நான் சொல்றமாதிரி ரெடி பண்ணுங்க – வாசிம் ஜாபர் வேண்டுகோள்

Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்திலும், இரண்டாவது டி20 போட்டி செப்டம்பர் 23-ஆம் தேதி நாக்பூர் மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 25-ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்திலும் நடைபெற இருக்கின்றது.

INDvsAUS

- Advertisement -

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்த தொடரானது அதற்கு முன்பு நல்ல பயிற்சி கிடைக்கும் என்கிற வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

அதே வேளையில் இந்தியாவில் முற்றிலுமாக சுழற்பந்து வீச்சிற்கு மைதானங்கள் சாதகமாக இருக்கும். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய மைதானங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் பேசியுள்ளார்.

Pitch

இது குறித்து அவர் கூறுகையில் : அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மைதானங்கள் அனைத்தும் வேகப்பந்துவீச்சு மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமாக இருக்குமாறு தயாரிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

ஆடுகளங்கள் கடினமாக இருந்தால் நல்ல பவுன்ஸ் கிடைக்கும். இப்படி வேகமாகவும், பவுன்ஸ் கிடைக்கும் மைதானங்கள் தயார்படுத்தப்பட்டால் அது இந்திய அணி ஆஸ்திரேலிய செல்லும்போது மிகவும் உதவிகரமாக இருக்கும். தற்போதைய இந்த மூன்று போட்டிகளிலும் அவர்கள் நல்ல வேகத்துடன் பவுன்ஸ் ஆகும் மைதானங்களில் விளையாடி பழகினால் அது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி விளையாடும் போது உதவும்.

இதையும் படிங்க : ஒரு சில மோசமான போட்டிகளால் அவரது சாதனைகள் மறைந்து போகாது – இளம் வீரருக்கு ரோஹித் சர்மா ஆதரவு

அதனால் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான மைதானங்களை முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக வடிவமைக்க வேண்டும் என வாசிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் இப்படி ஒரு வேண்டுகோளை பி.சி.சி.ஐ-யை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement