ஒரு சில மோசமான போட்டிகளால் அவரது சாதனைகள் மறைந்து போகாது – இளம் வீரருக்கு ரோஹித் சர்மா ஆதரவு

Rohith-2
Advertisement

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. நாளை மறுதினம் இந்த தொடரானது துவங்குவதற்கு முன்னதாக இன்று இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் டி20 உலக கோப்பை இந்திய அணியின் ஓப்பனர்கள் குறித்து பல்வேறு விடயங்களை ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டார்.

INDvsAUS

இது குறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை அணியில் இரண்டு ஓப்பனர்கள் உள்ளோம். ஆனால் ஓபனிங்கில் இறங்குவதற்கு நிறைய ஆப்ஷன்கள் கிடைப்பது மகிழ்ச்சியான ஒன்று. அந்த வகையில் டி20 உலக கோப்பை தொடரின் போது விராட் கோலி ஓப்பனிங் இறங்குவதும் ஒரு ஆப்ஷனாக இருக்கிறது.

- Advertisement -

எங்கள் அணியின் மூன்றாவது துவக்க வீரர் விராட் கோலி தான். சமீபத்தில் அவருடைய ஆட்டம் மிகச் சிறப்பாக உள்ளது அவர் நன்றாக விளையாடியுள்ளார். எனவே அவரே எங்களது மூன்றாவது ஓப்பனர். இது குறித்து நான் ராகுல் டிராவிடமும் பேசினேன். அதனால் சில போட்டிகளில் விராட் கோலி ஓபன் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

Rahul-1

கடந்த சில போட்டிகளாகவே அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே அவரை டி20 உலகக்கோப்பை தொடரின் சில போட்டிகளில் ஓப்பனராக களம் இறக்கவும் திட்டமிட்டுளோம் என்று பேசினார். அதனை தொடர்ந்து கே.எல்.ராகுலின் சறுக்கல் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணிக்கு கே.எல் ராகுல் தான் முதன்மை துவக்க வீரராக களம் இறங்குவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் ஒரு மிகச் சிறப்பான வீரர். இந்திய அணிக்காக அவர் விளையாடிய ஆட்டம் எப்போதுமே கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஓரிரு மோசமான ஆட்டங்களால் அவரது சாதனைகளை மறைக்க முடியாது.

இதையும் படிங்க : IND vs AUS : சம்மந்தமின்றி உமேஷ் யாதவை மீண்டும் கொண்டு வருவது ஏன்? கேப்டன் ரோஹித் விளக்கம்

ராகுல் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார். அவர் எப்படி விளையாடுவார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் என்னுடன் துவக்க வீரராக இறங்குவது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கே.எல் ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement