IND vs AUS : சம்மந்தமின்றி உமேஷ் யாதவை மீண்டும் கொண்டு வருவது ஏன்? கேப்டன் ரோஹித் விளக்கம்

Umesh Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சுமார் ஒரு வருடம் கழித்து தேர்வு செய்யப்பட்டது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் வரவேற்ப்பை பெற்றது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முழுமையாக விளையாடியிருந்த அவர் 30 வயதை கடந்து விட்டதால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவெடுத்தது.

shami

- Advertisement -

குறிப்பாக ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த தேர்வுக்குழு மொத்தமாக அவரை கழற்றிவிட்டது. இருப்பினும் ஐபிஎல் 2022 தொடரில் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்து முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்ல பந்துவீச்சு துறையில் முக்கிய பங்காற்றிய அவரை வயது காரணமாக புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

உமேஷ் கம்பேக்:
அந்த நிலைமையில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஆவேஷ் கான் வெளியேறிய போது எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் ஹர்டிக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்திய நிலைமை தோல்வியை பரிசளித்தது. அதனால் ஷமி, தீபக் சஹர் ஆகியோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலுவாக எழுந்த கோரிக்கைக்கு செவி சாய்த்த தேர்வுக்குழு உலக கோப்பையில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டும் தேர்வு செய்து இந்த ஆஸ்திரேலிய தொடரில் நேரடியாக வாய்ப்பு கொடுத்திருந்தது. அதனால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் உலக கோப்பையிலும் விளையாட வாய்ப்பு ஏற்படும் என்ற நிலைக்கு வந்த ஷமி கடைசி நேரத்தில் கரோனா பாதிப்பால் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

Umesh-Yadav

அதைவிட அவருக்கு பதிலாக மற்றொரு சீனியர் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் ஆரம்ப காலங்களில் முதன்மை பவுலராக இருந்த அவர் நாளடைவில் ரன்களை வாரி வழங்கி கடைசியாக கடந்த 2019இல் விளையாடியதுடன் மொத்தமாக ஒதுக்கப்பட்டார். அதனால் அவருடைய இந்திய வெள்ளைப் பந்து கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 43 மாதங்கள் கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடராஜன், மோசின் கான் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கும் போது சம்பந்தமின்றி உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். இது பற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக மொகாலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி, உமேஷ் யாதவ் போன்றவர்கள் நீண்ட காலமாக பந்து வீசி வருகிறார்கள். அதனால் இந்த வகையான கிரிக்கெட்டில் மட்டுமே அவர்கள் விளையாட வேண்டும் என்ற நிர்பந்தமான அவசியம் எதுவுமில்லை. மேலும் இதற்கு முன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர்கள் நிரூபித்தவர்கள்”

Rohith

“நாங்கள் அவருடைய தரத்தைப் புரிந்துள்ளோம். மேலும் இந்த வகையான கிரிக்கெட்டில் அவர்கள் விளையாடுவார்கள் என்று யோசிக்க அவர்கள் ஒன்றும் புதிய வீரர்கள் கிடையாது. எனவே ஷமி, உமேஷ் போன்றவர்கள் ஃபிட்டாக இருப்பதால் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் அவர்களுடைய பார்ம் பற்றியும் நாங்கள் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் ஐபிஎல் தொடரில் உமேஷ் எப்படி பந்து வீசினார் என்பதை நாங்கள் பார்த்தோம்”

- Advertisement -

“அவர் நல்ல ஸ்விங், வேகம் போன்ற அம்சங்களுடன் சிறப்பாக பந்து வீசினார். அதனால் பெரிய அளவில் விவாதிக்காமல் மீண்டும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வர உள்ள நிலையில் நாங்கள் நிறைய வீரர்களை முயற்சித்துப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வெற்றி நோக்கி முன்னோக்கி நடைபெறுவதே எங்களுடைய இலக்காகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பையில் தம்முடன் ஓப்பனிங்கில் களமிறங்க போவது யார் – ரோஹித் அளித்த பதில் இதோ

ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா அணிக்காக அசத்திய உமேஷ் யாதவ் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 7.06 என்ற சூப்பரான எக்கனாமியில் எடுத்து அசத்தலாக செயல்பட்டு சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை ஒருநாள் தொடரிலும் அற்புதமாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கிறார். அதனால் ஏற்கனவே அனுபவம் பெற்றுள்ள அவர் தற்போது நல்ல பார்முக்கு வந்துள்ளதால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு ரோகித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement