உலகக்கோப்பையில் தம்முடன் ஓப்பனிங்கில் களமிறங்க போவது யார் – ரோஹித் அளித்த பதில் இதோ

Rohith-2
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது. சமீபத்திய ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் ஆசிய கோப்பையை வெல்ல முடியாத இந்தியாவால் உலக கோப்பையை வெல்ல முடியுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் சில வீரர்களின் இடம் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

- Advertisement -

குறிப்பாக 2019க்குப்பின் சிறப்பாக விளையாடி ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் இடத்தை நிரந்தரமாக பிடித்துள்ள கேஎல் ராகுல் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சந்தித்த காயத்திலிருந்து திரும்பியது முதல் இதுவரை சுமாராக செயல்பட்டு வருகிறார். அதிலும் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் களமிறங்கிய அவர் ஜிம்பாப்வே தொடரில் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டானார். அதை விட ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக், கத்துக்குட்டி ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் என படு மோசமாக விளையாடியது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

ஓப்பனிங் யார்:
அதே சமயம் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி சதமடித்து பார்முக்கு திரும்பினார். அத்துடன் ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டுள்ள அவர் யாராலும் மறக்க முடியாத 973 ரன்களை தொடக்க வீரராக களமிறங்கி தான் விளாசினார்.

Virat Kohli

எனவே பார்மின்றி தவிப்பதுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பின்னடைவை ஏற்படுத்தும் ராகுலுக்கு பதில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற சலசலப்புகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மிகச்சிறந்த வீரரான கேஎல் ராகுல் தான் டி20 உலகக்கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கூறும் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்பிய விராட் கோலி 3வது தொடக்க வீரராக எப்போதும் தயாராக இருப்பார் என்று அறிவித்துள்ளார். இது பற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 நடைபெறும் மொஹாலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி எங்களுடைய 3வது தொடக்க வீரர். ஆசிய கோப்பை கடைசி போட்டியில் அவர் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. இருப்பினும் உலக கோப்பையில் கேஎல் ராகுல் பேட்டிங்கை தொடங்குவார், சில சமயம் அவருடைய செயல்பாடுகள் கவனிப்பின்றி போய் விடுகிறது. மேலும் அவர் இந்திய அணியின் முக்கியமான வீரர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்களுடைய முடிவுகளில் எவ்வித குழப்பமுமின்றி தெளிவாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிலும் ராகுல் எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய உயர்தரமான முக்கியமான வீரர். டாப் ஆர்டரில் அவர் இருப்பது எங்களுக்கு முக்கியமாகும்”

Rohith

“இருப்பினும் உலகக் கோப்பை போன்ற தொடரில் ஒரு இடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்களுடன் செல்வது உங்களுக்கு நல்ல வளைவு தன்மையை கொடுக்கும். நீங்கள் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய கூடிய தரமான வீரர்களையே விரும்புவீர்கள். சில சமயங்களில் நாங்கள் புதிதாக முயற்சிக்கும் போது அது பிரச்சனையை தீர்க்க நடத்தப்படுவதாக நாங்கள் பார்க்கவில்லை.

- Advertisement -

எங்களைப் பொறுத்தவரை தரமான வீரர்கள் என்ன செயல்பாடுகளை கொண்டு வருகிறார்கள் என்பதே முக்கியம். எங்களது அணியில் 3வது தொடக்க வீரர் இல்லை என்பதால் அந்த இடத்தில் அவர் இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்திய அணியில் உமேஷ் யாதவ் மீண்டும் பிடிக்க 3 காரணங்கள் இவைதான் – விவரம் இதோ

அதாவது இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற பேக்-அப் தொடக்க வீரர்கள் உலக கோப்பை அணியில் அறிவிக்கப்படாமல் இருப்பதால் அந்த இடத்தில் விராட் கோலியை பயன்படுத்த போவதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக உலக கோப்பையின் போது ஏதேனும் ஒரு தொடக்க வீரர் காயமடைந்தால் அல்லது சுமாராக செயல்பட்டு நீக்கும் பட்சத்தில் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement