IND vs AUS : இந்திய அணியில் உமேஷ் யாதவ் மீண்டும் பிடிக்க 3 காரணங்கள் இவைதான் – விவரம் இதோ

Umesh-Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து இங்கு விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது செப்டம்பர் 20-ஆம் தேதி துவங்க உள்ள வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

Umesh Yadhav

- Advertisement -

அவருக்கு பதிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரரான உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் மீண்டும் மூன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் உமேஷ் யாதவ் இப்படி மீண்டும் அணிக்கு கொண்டுவரப்பட காரணம் என்ன என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

1) ஐபிஎல் தொடரில் அற்புதமான செயல்பாடு : நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட உமேஷ் யாதவ் கொல்கத்தா அணியின் ஒரு சில வெற்றிகளுக்கு தனது பந்துவீச்சின் மூலம் பெருமளவு கை கொடுத்தார் என்று கூறலாம். அடிப்படை விலையான ஒரு கோடிக்கு கொல்கத்தா அணியின் மூலம் ஏலம் எடுக்கப்பட்ட இவர் பவர்பிளே ஓவர்களில் தனது ஸ்விங் பந்துவீச்சின் மூலம் அசத்தினார்.

Umesh Yadav

இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2) இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தல் : உமேஷ் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருவதால் மற்ற நேரங்களில் பெரிய அளவில் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில் அந்த இடைவெளியை பயனுள்ளதாக மாற்ற இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் விளையாடிய உமேஷ் யாதவ் கடந்த மாதம் அங்கு மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

மொத்தம் ஏழு போட்டியில் விளையாடிய அவர் 16 போட்டி விக்கெட்டுகளை எடுத்து காயம் காரணமாக மீண்டும் இந்தியா திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 3) அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் : உமேஷ் யாதவ் இங்கிலாந்தில் இருந்து காயம் காரணமாக இந்தியா வந்தடைந்த நிலையில் மீண்டும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிகள் தனது சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க : இதை மட்டும் செய்யலனா இந்தியாவால் டி20 உ.கோ’யை வெல்ல முடியாது – கவுதம் கம்பீர் சரியான கருத்து

பின்னர் தற்போது மீண்டும் பிட்டாக இருக்கும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடிய மிகப்பெரிய அனுபவம் வாய்ந்ததன் காரணமாகவும் மீண்டும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

Advertisement