- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே வருடத்தில் 4 தோல்வி.. இனியாச்சும் கிங் கோலி ரூட்டை கம்பீர் ஃபாலோ பண்ணனும்.. வாசிம் ஜாபர் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது. அத்துடன் சொந்த மண்ணில் குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் இந்தியா அவமான சாதனையையும் படைத்தது.

அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த அதீத சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் தோல்வியைச் சந்திக்க சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் முக்கிய காரணமானது. இருப்பினும் அதிலிருந்து தோல்விப் பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

விராட் கோலியின் ராஜாங்கம்:

ஏனெனில் தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். முன்னதாக வெப்பமான சூழ்நிலைகளைக் கொண்ட இந்திய திருநாட்டில் உள்ள பெரும்பாலான மைதானங்கள் இயற்கையாகவே சுழலுக்கு சாதகமாக இருப்பது வழக்கமாகும். அதை வைத்து 2023 வரை இந்திய அணி சொந்த மண்ணில் ராஜாங்கம் நடத்தியது என்றே சொல்லலாம்.

குறிப்பாக 2012 – 2024 வரை 12 வருடங்கள் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்காத இந்தியா தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து உலக சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக விராட் கோலி தலைமையில் 2014 – 2021 வரையிலான 8 வருடங்களில் இந்தியா சொந்த மண்ணில் வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோற்றது. ஆனால் அதையே பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்த பின் வெற்றி மந்திரமாக உருவாக்க முயற்சிக்கிறார்.

- Advertisement -

வாசிம் ஜாபர் அட்வைஸ்:

அதற்காக முதல் நாளிலேயே பந்து சுழல்வதற்கு சாதகமாக பிட்ச் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். கடைசியில் அதுவே இந்தியாவுக்கு ஆப்பாக மாறி கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4 படுதோல்விகளை பரிசளித்துள்ளது. இந்நிலையில் இந்தியா மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப விராட் கோலி ராஜாங்கம் நடத்திய காலகட்டங்களில் இருந்த பிட்ச்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வாசிம் ஜாஃபர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா சொந்த காசில் சூனியம் வெச்சு தோத்துட்டாங்க.. இந்தியாவில் கடைசி நாளை பாத்ததில்லை.. பவுமா பேட்டி

இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து நாம் பாடத்தைக் கற்கவில்லை என்பது போல் தெரிகிறது. இது போன்ற பிட்ச்சுகளில் எதிரணி மற்றும் நம்முடைய ஸ்பின்னர்களுக்கு இடையேயான இடைவெளி குறைகிறது. எனவே நாம் மீண்டும் விராட் கோலி கேப்டனாக இருந்த போது 2016/17 சீசனில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பயன்படுத்தப்பட்ட பழமையான பிட்ச்களுக்கு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -