தோனி செய்ததை நீங்க செய்யும் நேரம் வந்தாச்சு – ரோஹித்துக்கு முன்னாள் வீரர் கோரிக்கை, ஏற்க மறுக்கும் ரசிகர்கள்

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்கப்படாததும் டி20 கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் நிறைய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் அறிமுகமான 2018 முதல் இதுவரை 58 என்ற அதிகப்படியான போட்டிகளில் வாய்ப்பை பெற்று விளையாடிய அவர் அதில் எதிலுமே ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு வெற்றியை பெற்று கொடுத்ததில்லை.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்து தோனியையும் மிஞ்சி சில சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த காரணத்தால் அவரை முதன்மை விக்கெட் கீப்பராக்கும் முயற்சியில் ஈடுபள்ள அணி நிர்வாகம் எது நடந்தாலும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா போன்றவர்கள் கூட மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின் அட்டகாசமாக செயல்பட்டு ஜாம்பவான்களாக உருவெடுத்தனர்.

- Advertisement -

அதை கருத்தில் கொண்ட அணி நிர்வாகம் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அவருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறிய அவருக்கு அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் சூரியகுமார் யாதவ் விளையாடும் 4வது இடத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தடுமாறியபோது பாண்டியாவுடன் இணைந்து அதிரடியாக பேட்டிங் செய்த அவர் முதல் முறையாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சதமடித்து வெற்றி பெற வைத்தார்.

தோனியை பின்பற்றுங்க:
அப்படி திறமை இருந்தும் டி20 கிரிக்கெட்டில் கொடுக்கப்படும் அதிகப்படியான வாய்ப்பை வீணடிக்கும் அவரை சில போட்டிகளில் அதிரடியாக நீக்கி வாய்ப்பின் அருமையை உணர்த்துமாறு நிறைய ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். முன்னதாக ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் ரொம்பவே தடுமாறிய ரோகித் சர்மா 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ்தோனி தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுத்ததை கச்சிதமாக பயன்படுத்தி ஹிட்மேனாக அவதரித்து இன்று கேப்டனாகும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன் ஆரம்ப காலங்களில் 3வது இடத்தில் விளையாடிய தோனி கேப்டனானதும் அணியின் நலன் கருதி விராட் கோலிக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்து மிடில் ஆர்டரில் விளையாடினார். அந்த வரிசையில் தற்போது தன்னுடைய ஓப்பனிங் இடத்தை ரிஷப் பண்ட்டுக்கு கொடுத்துவிட்டு 4வது இடத்தில் விளையாடும் முடிவை ரோகித் சர்மா எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டுள்ளார். தோனியால் வளர்க்கப்பட்ட ரோகித் சர்மா தற்போது தோனியை பின்பற்றி ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ள அவர் இது பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினால் அவருடைய சிறப்பான இன்னிங்சை பார்க்க முடியும் என்று நான் இன்னும் நினைக்கிறேன். ரோஹித் சர்மா 4வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கிய முடிவை தற்போது ரிஷப் பண்ட் விஷயத்தில் ரோகித் சர்மா செய்ய வேண்டிய நேரம் இதுவாகும். அந்த வகையில் என்னுடைய டாப் 5 பேட்ஸ்மேன்கள் : ராகுல், பண்ட், விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதாவது ஏற்கனவே தொடக்க வீரராக களமிறங்கி ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்த ரோகித் சர்மா 4வது இடத்திலும் சிறப்பாக விளையாடிய கூடியவர் என்பதால் ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக களமிறக்கும் முடிவை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ள வாசிம் ஜாபர் அதில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இவரையா டி20 வேர்ல்டுகப் டீம்ல சேக்கல. கவுண்டி கிரிக்கெட்டில் தெறிக்கவிட்ட சிராஜ் – தரமான சம்பவம்

ஆனால் ரிஷப் பண்ட் என்ற ஒருவருக்காக 2007 உலகக்கோப்பையில் கிரேக் சேப்பல் நிகழ்த்தியது போல் மொத்த பேட்டிங் ஆர்டரையும் தலைகீழாக மாற்றுவது எந்த வகையிலும் வெற்றியை கொடுக்காது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் ஏற்கனவே சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரில் தொடக்க வீரராக கொடுக்கப்பட்ட வாய்ப்பில் ரிஷப் பண்ட் சொதப்பியதை சுட்டிக் காட்டுகிறார்கள்

Advertisement