இவரையா டி20 வேர்ல்டுகப் டீம்ல சேக்கல. கவுண்டி கிரிக்கெட்டில் தெறிக்கவிட்ட சிராஜ் – தரமான சம்பவம்

Siraj
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 5 டி20 போட்டிகள், 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்னர் மிகச் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வரும் சிராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், ஒருநாள் கிரிக்கெட்டிலும் அற்புதமான வீரராக திகழ்ந்து வருகிறார்.

ஆனாலும் இவருக்கு டி20 அணியில் உள்ள போட்டி காரணமாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. இருப்பினும் இடையிடையே அவருக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளில் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தும் அவருக்கு இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

அதோடு இந்த உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களின் பட்டியலை தேர்வு செய்யும் போது அவரது பெயர் பரிசீலனை பட்டியலில் கூட இடம் பெறவில்லை. அந்த அளவிற்கு தற்போது இந்திய அணியில் ஏகப்பட்ட பவுலர்கள் உள்ளனர். இந்திய அணி அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வேளையில் இந்திய அணியில் இடம் பெறாத சிராஜ் இங்கிலாந்து சென்று கவுண்ட் கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார்.

அதன்படி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்ட்டி கிரிக்கெட்டில் வார்விக்சையர் அணிக்காக விளையாடி வரும் சிராஜ் தனது அறிமுக போட்டியில் சோமர்செட் அணிக்கு எதிராக அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பந்துவீச்சில் சோமர்செட் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே இந்த கவுண்ட்டி ஆட்டத்தின் அறிமுக கூட்டிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சிராஜ் தெறிக்கவிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன் கவுண்டி கிரிக்கெட்டின் அறிமுக போட்டியிலே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் முகமது சிராஜ் படைத்துள்ளார். சமீப காலமாகவே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் சிராஜ் நிச்சயம் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக கூடிய விரைவில் மாற அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பகையாளியான ஆஸ்திரேலிய வீரர்களிடம் அன்பை காட்டிய 5 இந்திய வீரர்களின் ஜென்டில்மேன் தருணங்கள் – சிறப்பு பதிவு

என்னதான் டி20 கிரிக்கெட்டில் சிராஜ் இன்னும் நிரந்தர இடம் பிடிக்காமல் இருந்தாலும், கிரிக்கெட்டின் உண்மையான சோதனை களமாக பார்க்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது சிராஜ் தொடர்ந்து தவறாமல் இடம்பெற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement