உலகக்கோப்பை தொடரில் இவரே இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக இருப்பார் – வாசிம் ஜாபர் நம்பிக்கை

Wasim-Jaffer
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற இருப்பதினால் ரசிகர்கள் இந்த உலகக் கோப்பை தொடரினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் தேர்வு குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழப்போவது யார்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் கூறுகையில் :

ஹார்டிக் பாண்டியா எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வைட்டல் வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாகவே அவர் குஜராத் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி உள்ளார். அதுமட்டுமின்றி 12 ஆண்டுகள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இருக்கும் இந்திய அணிக்கு அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கை கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் போது யுவராஜ் சிங் எவ்வாறு கை கொடுத்தாரோ அதேபோன்று ஹார்டிக் பாண்டியா இம்முறை ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுப்பார். எனவே என்னை பொறுத்தவரை இந்திய அணியின் முக்கிய வீரராக உலக கோப்பையில் பாண்டியா திகழ்வார் என்று வாசிம் ஜாபர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட இந்திய வீரர். என்ன ஆனது? – வெளியான அறிவிப்பு இதோ

அவர் கூறியது போன்றே சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் அவர் பேட்டிங்கில் 87 ரன்கள் குவித்து அசத்தியிருந்ததோடு, நேபாள் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement