ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் 3 புள்ளிகளை பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதை தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி தன்னுடைய முதல் சூப்பர் 4 போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்போட்டி நடைபெறும் கொழும்பு நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் ஸ்பெஷலாக ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்று ஆசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இத்தொடரில் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கினார். ஆனால் ஏற்கனவே சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து வந்த போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்த கேஎல் ராகுல் லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்திருந்தார். அத்துடன் அந்த நிலைமையை சமாளிப்பதற்காக சஞ்சு சாம்சன் ரிசர்வ் பேக்-அப் வீரராக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நாடு திரும்பிய சாம்சன்:
அந்த நிலைமையில் இலங்கைக்கு பயணித்த இந்திய அணி வீரர்களுடன் சென்ற சஞ்சு சாம்சனுக்கு லீக் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக இசான் கிசான் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் களமிறங்கும் வாய்ப்பை பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார். இந்த நிலையில் கேஎல் ராகுல் முழுமையாக குணமடைந்து ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக இலங்கை சென்றடைந்துள்ளார்.
அதை தொடர்ந்து இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சிகளை செய்து வரும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் அவர் வந்து விட்டதால் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் 4 சுற்றில் விக்கெட் சூப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் கேஎல் ராகுல் ஒருவேளை காயத்தை சந்தித்தால் கூட நிலைமையை சமாளிப்பதற்கு இஷான் கிசான் தயாராக இருக்கிறார்.
அதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆசிய கோப்பையில் வேலையில்லை என்று கருதும் இந்திய அணி நிர்வாகம் அவரை தாயகத்திற்கு அனுப்பியிள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. முன்னதாக கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் பெற்ற வாய்ப்புகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தற்சமயத்தில் ஓரளவு நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். குறிப்பாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெற்று நன்றாக செயல்பட்டார்.
இதையும் படிங்க: பாவம் அவர மட்டும் ஏன் எல்லாரும் விமர்சிக்குறீங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு பரிதாப ஆதரவுடன் ஆகாஷ் சோப்ரா பேட்டி
ஆனால் டி20 தொடரில் தடுமாறிய காரணத்தால் அவரை ஆசிய மற்றும் உலக கோப்பையில் மொத்தமாக கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத சூரியகுமார் யாதவுக்கு நேரடியாக வாய்ப்பு கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் ரிசர்வ வீரராக கூட நீங்கள் ஆசிய கோப்பையில் முழுமையாக இருக்க வேண்டாம் என்ற வகையில் அவர் தற்போது தாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.