பாவம் அவர மட்டும் ஏன் எல்லாரும் விமர்சிக்குறீங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு பரிதாப ஆதரவுடன் ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash-Chopra
- Advertisement -

ஆசிய கண்டத்தின் புதிய கிரிக்கெட் சாம்பியனை நிர்ணயிக்கும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் 3 புள்ளிகளை பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அடுத்ததாக சூப்பர் 4 சுற்றில் தம்முடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் மீண்டும் லேசான காயத்தை சந்தித்ததால் லீக் சுற்றில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற இசான் கிசான் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 66/4 என சரிந்த இந்தியாவை 82 ரன்கள் அடித்து ஓரளவு மானத்தை காப்பாற்றினார்.

குறிப்பாக துவக்க வீரராக வெற்றிகரமாக செயல்பட்டுள்ள அவரால் மிடில் ஆர்டரில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் தரமான பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிசான் அனைத்து இடங்களிலும் அசத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் தற்போது கேஎல் ராகுல் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளதால் சூப்பர் 4 சுற்றில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏன் பிடிக்கல:
இருப்பினும் ஏற்கனவே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராகுல் தற்போது எவிதமான போட்டிகளிலும் விளையாடாமல் எந்தளவுக்கு ஃபார்மில் இருக்கிறார் என்பது தெரியாததால் இசான் கிசான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராகுல் போன்ற பெரிய பெயரை கொண்ட வீரரை விட இசான் கிசான் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரரை தேர்வு செய்தால் மட்டுமே இந்தியாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று கௌதம் கம்பீர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் ராகுல் பற்றி அனைவரும் பிடிக்காமல் இப்படி விமர்சிப்பது ஏன்? என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக இந்திய அணி நிர்வாகமும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க யோசிப்பதற்கான காரணம் புரியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது மிகவும் அதிகப்படியான விவாதமாக இருக்கிறது. குறிப்பாக அனைத்து நேரமும் கேஎல் ராகுல் பற்றி மட்டும் ஏன் அதிகமாக விவாதிக்கப்படுகிறது? இந்திய அணி நிர்வாகமும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஏன் யோசனை செய்கிறது. இத்தனைக்கும் துவக்க வீரரான அவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் சரிக்கு சமமாக விளையாடக்கூடிய அளவுக்கு திறமை கொண்ட சில வீரர்களில் ஒருவராக இருக்கிறார்”

இதையும் படிங்க: உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் கழட்டிவிடப்பட இதுவே காரணம் – ஏ.பி.டி கருத்து

“குறிப்பாக இந்தியாவுக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரில் அவரும் ஒருவராக இருக்கிறார். எனவே கேஎல் ராகுல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என்று கூறினார். முன்னதாக ஏற்கனவே தடவலாக செயல்பட்ட போதிலும் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்து வந்ததை ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் இப்போது இஷான் கிசான் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement