IND vs AUS : அவர நெனச்சா கஷ்டமா இருக்கு ஆனால் – முதல் போட்டிக்கான ப்ளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் தொடங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் கண்டிப்பாக அனல் பறக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்தியா 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருவதால் இம்முறையும் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பு உறுதியாகி விட்ட காரணத்தால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் வரலாற்றுத் தோல்வியை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்ல வேண்டும் என்பதே ஆஸ்திரேலிய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இந்திய மண்ணில் இத்தொடரை வெல்வது ஆஷஸ் தொடரை வெல்வதை விட பெரிய சாதனையாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.

- Advertisement -

ப்ளேயிங் லெவன்:
அதனால் சொந்த மண்ணாக இருந்தாலும் மிகப்பெரிய சவால் காத்திருக்கும் இத்தொடரில் ஆரம்பத்திலேயே சிறப்பான 11 பேர் அணியை தேர்வு செய்வது இந்தியாவின் வெற்றிக்கு அவசியமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கக்கூடிய ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறியுள்ள நிலையில் நிலையில் ஸ்பின் பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயரும் இத்தொடரில் காயத்தால் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு பதில் யார் விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுவதுடன் ரோகித் சர்மாவுடன் கேஎல் ராகுல் – சுப்மன் கில் ஆகியோரில் தொடக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வியும் நிலவுகிறது.

இந்நிலையில் நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டிக்கான தனது கனவு பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ள இந்திய முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் தொடக்க வீரராக துணை கேப்டன் கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ளார். அதே சமயம் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில்லை 5வது இடத்தில் விளையாடுவதற்கு தேர்வு செய்துள்ள அவர் அதிரடியாக விளையாடக் கூடிய ரிசப் பண்ட் இடத்தில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

மேலும் நீண்ட காலமாக பெஞ்சில் அமர்ந்திருந்த கேஎஸ் பரத்தை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை ஆஸ்திரேலியாவை திணறடிக்கப் போகும் சுழல் பந்து வீச்சு கூட்டணியாக தேர்வு செய்துள்ளார். அத்துடன் பும்ரா இல்லாத நிலைமையில் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரை மட்டும் தேர்வு செய்துள்ள அவர் அக்சர் படேலை கழற்றி விட்டு ரவீந்திர ஜடேஜா அஷ்வின் ஆகியோரை ஆல் ரவுண்டர்களாகவும் தேர்வு செய்துள்ளார்.

இருப்பினும் இந்த அணியில் அக்சர் படேலை எடுக்காதது தமக்கே மிகவும் ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ள அவர் மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப் யாதவ் நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துவார் என்பதால் தேர்வு செய்துள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாக்பூர் மைதானத்திற்கு ஏற்றவாறு தனது அணியை தேர்வு செய்துள்ள அவர் ரசிகர்களையும் தங்களுடைய கனவு 11 பேர் அணியை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டிக்கான வாசிம் ஜாபர் 11 பேர் இந்திய அணி இதோ:

இதையும் படிங்க: மொதல்ல இதை டெலிட் பண்ணுப்பா. ரசிகர்கரின் கேள்வியால் தர்ம சங்கடத்திற்கு ஆளான – தினேஷ் கார்த்திக்

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், செடேஸ்வர் புஜாரா, விராட் கோலி, சுப்மன் கில், கேஎஸ் பரத் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

Advertisement