மொதல்ல இதை டெலிட் பண்ணுப்பா. ரசிகர்கரின் கேள்வியால் தர்ம சங்கடத்திற்கு ஆளான – தினேஷ் கார்த்திக்

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருடன் இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் மூன்று ஆண்டுகள் கழித்து இடம் பிடித்தார். ஆனால் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதும் அவர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.

அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக இளம் வீரர்களை கொண்ட அணியே கட்டமைக்கப்பட்டு வருவதால் தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் ட்ராபிக்கான டெஸ்ட் தொடரில் அவர் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக் அடுத்ததாக தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை வரணனை செய்ய இருக்கிறார்.

அவரது வர்ணனைக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருப்பதினால் அவர் மீண்டும் தனது பணியை துவங்க உள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் டி.கேவுடன் உங்களது கேள்வியை கேளுங்கள் என்று ரசிகர்களுடன் ஒரு உரையாடலை நிகழ்த்தினார்.

- Advertisement -

அதில் பல்வேறு ரசிகர்களும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் குறிப்பாக ஒரு ரசிகர் வித்தியாசமாக 2019-ஆம் ஆண்டு அரை இறுதியில் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இருந்த ஸ்கோர் போர்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இப்படி ஒரு சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறீர்கள்? இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கிண்டலாக கேட்டார்.

இதையும் படிங்க : அவரோட பார்ம் தான் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கும், அந்த 3 ஸ்பின்னர்களும் ஆஸியை சாச்சுடுவாங்க – ரவி சாஸ்திரி பேட்டி

அதற்கு சற்றும் கோவம் அடையாமல் தினேஷ் கார்த்திக் : இதை தயவு செய்து இப்பவே டெலிட் செய்யுங்கள் என்று அவரும் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement