அவரோட பார்ம் தான் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கும், அந்த 3 ஸ்பின்னர்களும் ஆஸியை சாச்சுடுவாங்க – ரவி சாஸ்திரி பேட்டி

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. கடந்த 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடந்த 10 வருடங்களாக சொந்த மண்ணில் உலகின் எந்த அணிகளுக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் களமிறங்குகிறது. மறுபுறம் ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

Ashwin Maat renshaw

- Advertisement -

அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த சூழ்நிலைகளில் அசத்தக்கூடிய இந்திய அணியில் நிறைய ஸ்பின்னர்கள் இருந்தாலும் தனது அனுபவத்தால் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை சாய்த்து உலகத்தரம் வாய்ந்த சாம்பியன் ஸ்பின்னராக ஜொலிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அஷ்வின் பார்ம்:
அதனாலேயே பிக்பேஷ் தொடரின் போதே அவரை சிறப்பாக எதிர்கொள்ள தேவையான திட்டங்களை வகுத்து விட்டதாக தெரிவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் பின்னரை தேடி பிடித்து வலைப்பபயிற்சியில் ஈடுபட்டது உலக அளவில் வைரலானது. அந்த வகையில் அஷ்வினையும் இந்தியாவையும் சாய்க்க ஆஸ்திரேலியா பெரிய திட்டங்களை வகுத்துள்ளது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் அஷ்வினுடைய ஃபார்ம் தான் இந்த தொடரின் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி வெற்றிக்கு ஆஸ்திரேலியா போல எந்த எக்ஸ்ட்ரா திட்டங்களையும் வகுக்காமல் அடிப்படை திட்டங்களை பின்பற்றினாலே போதுமானது என்று கூறியுள்ளார்.

Kuldeep Yadav 1

அத்துடன் ஆஸ்திரேலியாவை சாய்க்க 2வது ஸ்பின்னராக ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் 3வது ஸ்பின்னராக நிச்சயம் குல்தீப் யாதவ் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அஷ்வின் அனலாக செயல்பட்டால் அதுதான் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதாக இருக்கும். அவர் உலகின் பெரும்பாலான கால சூழ்நிலைகளில் அசத்தும் க்ளாஸ் வீரர். ஆனால் இந்திய சூழ்நிலைகளில் அவர் மிகவும் ஆபத்தான வீரர். குறிப்பாக பந்து சுழல ஆரம்பித்தால் அவர் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடிப்பார்”

- Advertisement -

“ஆஸ்திரேலியாவுக்காக அஷ்வின் அதிகப்படியான திட்டங்களை வகுக்க வேண்டியதில்லை. அவர் தன்னுடைய திட்டங்களில் நிலைத்து செயல்பட்டால் போதுமானது. இந்த சூழ்நிலைகளில் அவர் மிகவும் முக்கியமான வீரர். அவருடைய ஃபார்ம் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கலாம். அத்துடன் அவர் உங்களுக்கு முக்கியமான ரன்களையும் எடுத்து கொடுப்பார். எனவே அஷ்வின் நீங்கள் எதைப் பற்றியும் அதிகமாக நினைக்க வேண்டியதில்லை. அடிப்படையை பின்பற்றி எஞ்சியதை பிட்ச் செய்வதற்கு விடுங்கள். ஏனெனில் அது தான் இந்தியாவில் செயல்படும்”

Shastri

“3வது ஸ்பின்னரைப் பொறுத்த வரை நான் குல்தீப் யாதவை நேரடியாக தேர்வு செய்வேன். ஜடேஜா மற்றும் அக்சர் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பவுலர்கள். ஆனால் குல்தீப் மிகவும் வித்தியாசமானார். குறிப்பாக முதல் நாளில் நீங்கள் டாஸ் தோற்றால் அவரைப் போன்ற ஒருவர் தேவைப்படுவார். முதல் நாளிலேயே மைதானம் சுழல் ஆரம்பித்தாலும் இல்லையென்றாலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை கொண்டவர்”

இதையும் படிங்க: பாக்ஸை கூட பிரிக்காமல் புதிய செல்போனை தொலைத்த விராட் கோலி. கிண்டல் செய்து கருத்தை பதிவிட்ட ஸோமாட்டோ

“மேலும் போட்டி நடைபெற நடைபெற நடைபெற வேகப்பந்து பேச்சாளர்கள் ஏற்படுத்தும் சேதங்களை பயன்படுத்தி அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே அவரைப் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னர் உங்களுக்கு நிச்சயமாக தேவை. என்னை பொறுத்த வரை இந்த தொடரில் டாஸ் பற்றி கவலைப்படாமல் முதல் நாளிலிருந்தே பிட்ச் சுழல்வதை விரும்புவேன். ஏனெனில் சொந்த மண்ணில் விளையாடும் நீங்கள் அந்த சாதகத்தை பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement