பாக்ஸை கூட பிரிக்காமல் புதிய செல்போனை தொலைத்த விராட் கோலி. கிண்டல் செய்து கருத்தை பதிவிட்ட ஸோமாட்டோ

Kohli-and-Zomato
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு கருத்திற்கு zomato நிறுவனம் அளித்துள்ள பதிலானது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி ஓய்வில் இருந்த விராட் கோலி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைய உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய அவர் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் தனது மனைவியுடன் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு அது சம்மந்தமான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதன்பிறகு விராட் கோலி தற்போது மீண்டும் டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்து நாக்பூரில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் தான் புதியதாக வாங்கிய செல்போனை பாக்ஸ் கூட திறந்து பார்க்காத நிலையில் அந்த செல்போன் தொலைந்து போய்விட்டதாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்து இருந்தார். அதற்கு பலரும் பல்வேறு பதில்களை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் அவரது இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பிரபல தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான zomato அவர்களது டிவிட்டர் பக்கத்தின் மூலம் விராட் கோலியின் அந்த பதிவிற்கு கிண்டல் செய்யும் விதமாக தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

அந்தவகையில் அவர்கள் பதிவிட்ட அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : உங்களது புதிய தொலைபேசி காணாமல் போன சோகம் மறக்க அண்ணியின் ஃபோனில் இருந்து ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து பாருங்கள் சற்று உங்களுக்கு நிம்மதியுடன் இருக்க அது உதவும் என கிண்டலாக டிவீட் செய்துள்ளது.

இதையும் படிங்க : மட்டன் பிரியாணி சாப்பிட்டா மட்டும் போதுமா? 2018இல் ஷமியை சூடேற்றி இந்தியா வென்ற பின்னணியை பகிர்ந்த முன்னாள் கோச்

இப்படி அந்த நிறுவனம் ட்வீட் செய்வது சற்று வேடிக்கையான ஒன்றாக இருந்தாலும் இது விளம்பர வியூகம் காரணமாக அவர்கள் அப்படி செய்திருக்கலாம் என்று தெரிகிறது. எப்பொழுதுமே தனது உடைமைகள் மற்றும் பொருட்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் விராட் கோலி இம்முறை எப்படி தனது போனை அதுவும் புது ஃபோனை தவறவிட்டார் என்பது தெரியவில்லை.

Advertisement