மட்டன் பிரியாணி சாப்பிட்டா மட்டும் போதுமா? 2018இல் ஷமியை சூடேற்றி இந்தியா வென்ற பின்னணியை பகிர்ந்த முன்னாள் கோச்

Shami
- Advertisement -

கடந்த 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் தடுமாறிய இந்தியாவை தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்தார். ஆரம்பத்தில் அவரது தலைமையிலும் சொந்த மண்ணில் மட்டுமே வெல்லும் அணியாக இருந்த இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலிருந்து தான் வெளிநாடுகளில் வெல்லும் அணியாக மாறியது.

shami 2

- Advertisement -

அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றியை நெருங்கிய இந்தியா முக்கிய நேரங்களில் சொதப்பி தோல்வியை சந்தித்து 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால் ஜொஹன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் 241 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 136/3 என்ற ஸ்கோருடன் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் அதன்பின் விஸ்வரூபம் எடுத்த இந்திய பவுலர்கள் தென்னாபிரிக்காவை 177 ரன்களுக்கு சுருட்டி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஒயிட்வாஷ் அவமான தோல்வியை தவிர்க்க உதவினர்.

மட்டன் பிரியாணி:
அதிலும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மிரட்டிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் அன்றைய நாளின் தேநீர் இடைவெளியின் போது மட்டன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த முகமது ஷமியை பார்த்து “களத்தில் இந்தியா போராடாமல் தோற்கும் நிலையில் இருக்கிறது உங்களுக்கு பசியை போக்கிக் கொள்வது தான் முக்கியமாக இருக்கிறதா” என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டத்துடன் பேசியதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

Shami-3

அதனால் சூடான ஷமி தேநீர் இடைவெளிக்கு பின் டீ வில்லியர்ஸ், டு பிளேஸிஸ் ஆகியோரை பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் காலி செய்ததை பயன்படுத்தி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக கூறியுள்ளார். இது பற்றி தனது சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “கேப் டவுன் போட்டியில் நாங்கள் தோற்றோம். குறிப்பாக 208 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோற்றது மோசமானது. பின்னர் செஞ்சூரியனில் நடைபெற்ற 2வது போட்டியிலும் வென்று 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருக்க வேண்டிய நாங்கள் மீண்டும் தோற்று 2 – 0 என்ற கணத்தில் ஆரம்பத்திலேயே தொடரை இழந்தோம்”

- Advertisement -

“அப்படி ஏற்கனவே சரணடைந்த நாங்கள் ஜொஹனஸ்பர்க் நகருக்கு சென்றோம். அப்போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நாங்கள் நினைத்துப் பார்க்காததை செய்தோம். ஏனெனில் போட்டி நடைபெற நடைபெற பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது என்பதை உணர்ந்தோம். போதாக்குறைக்கு முதல் இன்னிங்ஸில் ஷமி 12 ஓவரில் 46 ரன்களை வாரி வழங்கினார். முக்கியமான 4வது நாளில் தேநீர் இடைவெளி வரை அவர் மீண்டும் சுமாராகவே பந்து வீசியதால் தென் ஆப்பிரிக்கா வெற்றியை நெருங்கியது. குறிப்பாக 241 ரன்களை துரத்தும் போது 136/3 என்ற நல்ல நிலையில் அவர்கள் தேனீர் இடைவெளிக்கு வந்தனர்”

shastri

“அப்போது அப்போட்டியில் மேற்கொண்டு வெற்றிக்கான ஆர்வமில்லாத நிலைமையில் வந்த முகமது ஷமி தட்டில் மட்டன் கறியுடன் சாதத்தை போட்டு சாப்பிட்டார். அந்த சமயத்தில் ஷமியை பார்த்து “அடப்பாவி இங்கேயே உனது பசியை போக்கிக் கொள்வாயா அல்லது விக்கெட்டை எடுப்பதற்காகவும் கொஞ்சம் சக்தியை சேமிப்பாயா?” என்று வசை பாடிய ரவி சாஸ்திரி திட்டினார். அதற்கு “ஆம் ஆம் நான் இங்கே காது கொடுத்து அங்கேயும் சாப்பிடுவேன்” என்று சமீப பதிலளித்தார்”

- Advertisement -

“நாங்கள் அனைவருமே ரவி சாஸ்திரியின் ஆதங்கத்தை புரிந்து கொண்டோம். அத்துடன் மீண்டும் போட்டு துவங்குவதற்கு முன்பாக ஷமியை அழைத்துச் சென்ற ரவி சாஸ்திரி நீங்கள் மேட்ச் வின்னர் என்றெல்லாம் உத்வேகத்தை கொடுக்காமல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கொடுத்த சத்தியத்தை மீண்டும் நினைவு படுத்தினார். அதைத் தொடர்ந்து துவங்கிய போட்டியில் ஷமி எதிரணி வீரர்களால் தொடவே முடியவில்லை”

Sridhar

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸி தொடரில் சச்சின், கவாஸ்கர், சேவாக்கை மிஞ்சி விராட் கோலி உடைக்க காத்திருக்கும் 3 சாதனைகளின் பட்டியல்

“அவர் மிடில் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு 28 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இறுதியில் “தயவு செய்து என்னை கோபப்படுத்துங்கள். அந்த கோபமில்லை என்றால் என்னால் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்க முடியாது” என்று ரவி சாஸ்திரிக்கு ஷமி பதலளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement