IND vs AUS : ஆஸி தொடரில் சச்சின், கவாஸ்கர், சேவாக்கை மிஞ்சி விராட் கோலி உடைக்க காத்திருக்கும் 3 சாதனைகளின் பட்டியல்

Kohli sachin gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெரும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பு உறுதியாகி விட்டதால் கடந்த 2 தொடர்களில் முதல் முறையாக தங்களுக்கு சொந்த மண்ணில் வரலாற்றுத் தோல்வியை கொடுத்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

AUs vs IND

- Advertisement -

சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்கு அஷ்வின் போன்ற ஸ்பின்னர்கள் பலம் சேர்க்கிறார்கள். ஆனால் ரிசப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலைமையில் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி பொறுப்புடன் செயல்பட வேண்டியது வெற்றிக்கு அவசியமாகிறது.

காத்திருக்கும் சாதனைகள்:
கடந்த 10 வருடங்களாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு 2022 ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்து டி20 உலக கோப்பையில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களிலும் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திருப்பியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சதமடிக்காமல் இருந்து வரும் அவர் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

kohli

எனவே அந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் இத்தொடரில் களமிறங்கும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றுவார் என்று உறுதியாக நம்பலாம். பொதுவாக ஆரம்ப நாட்களின் உழைப்பால் இப்போதெல்லாம் அவர் களமிறங்கி விளையாடினாலே சாதனைகள் தாமாக வரும் என்ற நிலைமையில் இத்தொடரில் காத்திருக்கும் சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. கவாஸ்கரை மிஞ்சுவரா: பொதுவாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி மொத்தமாக 20 போட்டிகளில் 7 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். கடைசியாக 2018இல் பெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்திருந்த அவர் இத்தொடரில் 2 சதங்களை அடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கர் சாதனையை உடைத்து புதிய சாதனை படைப்பார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராக 11 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கும் நிலையில் 2வது இடத்தில் 8 சதங்களுடன் சுனில் கவாஸ்கர் உள்ளார்.

- Advertisement -

2. சேவாக்கை மிஞ்சுவரா: 2019க்குப்பின் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் சராசரியும் முதல் முறையாக 49க்கு கிழே வந்துள்ளது. எனவே மீண்டும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர் இந்த தொடரில் 391 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 5வது இந்திய வீரர் என்ற வீரேந்திர் சேவாக் சாதனையை தகர்த்து டாப் 5 இடத்திற்குள் நுழைந்து புதிய சாதனை படைப்பார்.

Kohli

தற்போது 8119 ரன்களுடன் விராட் கோலி 6வது இடத்தில் இருக்கும் நிலையில் வீரேந்திர சேவாக் 8503 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

1. அதிவேக 25,000: கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகை வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு வரும் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முறையே 8119, 12809, 4008 என மொத்தம் 546 இன்னிங்ஸில் 24,936 ரன்களை குவித்துள்ளார். அந்த நிலையில் இத்தொடரில் மேற்கொண்டு 64 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ரன்கள் எடுக்கும் வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இதையும் படிங்க: ஏன் அடிச்சுக்குறீங்க, உங்களால எதுவும் செய்ய முடியாது பேசாம அதை செய்ங்க – பாகிஸ்தானுக்கு அஷ்வின் அட்வைஸ்

அதை விட அவர் 64 ரன்களை எடுக்கும் போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25000 ரன்களை குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைப்பார். ஏனெனில் இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 576 இன்னிங்ஸில் 25,000 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.

Advertisement