ஏன் அடிச்சுக்குறீங்க, உங்களால எதுவும் செய்ய முடியாது பேசாம அதை செய்ங்க – பாகிஸ்தானுக்கு அஷ்வின் அட்வைஸ்

Ashwin
- Advertisement -

2023 ஆசிய கோப்பை விவகாரம் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான கருதப்படும் இந்தியா பாகிஸ்தானிடையே அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இரு நாடுகளும் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதி வருகின்றன. அந்த நிலையில் 2022இல் ஆசிய கவுன்சிலின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் 2023 ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் இந்திய அரசின் அனுமதி இல்லாமல் எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு பயணத்தின் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Jay Shah IND vs PAk

- Advertisement -

அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு நீங்கள் வரவில்லை என்றால் வரும் அக்டோபரில் உங்களது நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று பதிலடி கொடுத்தது. அப்போதிலிருந்தே இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று பக்ரைனில் நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் அதைப் பற்றிய விவாதத்தை பாகிஸ்தான் எழுப்பியதாக தெரிகிறது.

அஷ்வின் பதிலடி:
ஆனால் அதற்கு பிடி கொடுக்காத ஜெய் ஷா அதைப் பற்றிய இறுதி முடிவை அடுத்த கூட்டத்திற்கு தள்ளி வைத்ததாகவும் அதனால் கோபமடைந்த புதிய பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி ஏற்கனவே அறிவித்தது போல் எங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்களது நாட்டில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று அவரிடம் நேரடியாகவே எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியானது. இதற்கிடையே எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் இந்தியாவுக்கு நரகத்தை பார்க்கும் நிலை ஏற்படும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்தத் பகிரங்கமாக எச்சரித்தது இந்த விவகாரத்தில் மேலும் புயலை கிளப்பியுள்ளது.

Jay Shah Najam Sethi

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவிக்கும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆசிய கோப்பையை இலங்கை போன்ற வெளிநாடுகளில் நடத்துவதே இதற்கான சரியான தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுவதாக உள்ளது. ஆனால் அது பாகிஸ்தானில் நடைபெற்றால் அதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. ஒருவேளை ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்பதை பாகிஸ்தான் விரும்பினால் பேசாமல் அத்தொடர் நடைபெறும் இடத்தை மாற்றுங்கள்”

- Advertisement -

“இதற்கு முன் பலமுறை இவ்வாறு நடந்ததை நாம் பார்த்துள்ளோம். நாங்கள் அவர்களின் இடத்திற்கு செல்லும் நாள் மாட்டோம் என்று சொன்னால் அவர்களும் எங்கள் இடத்திற்கு வர மாட்டார்கள். அதே போல் பாகிஸ்தான் உலக கோப்பைக்கு பங்கேற்க வரமாட்டோம் என்று கூறியுள்ளது. இருப்பினும் இது சாத்தியமாகாது என்று நினைக்கிறேன். ஆனால் இந்த விவகாரத்தின் இறுதி முடிவு ஆசிய கோப்பையை இலங்கைக்கு நகர்த்துவதாக இருக்கலாம்”

Ashwin

“ஏனெனில் அது 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் முக்கியமான தொடராகும். அத்துடன் சமீப காலங்களில் துபாயில் நிறைய கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகிறது நண்பர்களே. எனவே இம்முறை அத்தொடர் இலங்கைக்கு நகர்த்தப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று கூறினார். முன்னதாக ஆசிய கோப்பையில் கிடைக்கும் வருமானத்தை பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இந்தியா மட்டும் அதற்கு நிதி கொடுக்கும் நாடாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: 2023 ஒரு மாதத்திற்குள் ஓய்வு பெற்ற 6 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

அத்துடன் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்காமல் போனால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் பங்கு பணமும் பாகிஸ்தானுக்கு கிடைக்காது. அதனால் என்னதான் வரமாட்டோம் புறக்கணிப்போம் என்று பேசினாலும் இறுதியில் ஆசிய கவுன்சிலில் ராஜாங்கம் நடத்தும் இந்தியா எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதி முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement