2023 ஒரு மாதத்திற்குள் ஓய்வு பெற்ற 6 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

amla-1
- Advertisement -

இப்போது தான் 2023 புத்தாண்டு கோலாகலமாக துவங்கியது அதற்குள் ஜனவரி மாதம் முடிந்து விட்டதே என்று சிங்கிள் ரசிகர்கள் கலகலப்பாக பேசுவது போல் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள இந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாயில் முதல் முறையாக புதிய டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல் இந்திய கிரிக்கெட்டில் சுப்மன் கில் இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்ததும் கடுமையாக போராடிய ராகுல் திரிபாதி ஒரு வழியாக வாய்ப்பு பெற்றதும் அரங்கேறியது. அதே சமயம் உலகம் முழுவதிலுமிருந்து சில நட்சத்திர வீரர்கள் இந்த வருட ஆரம்பத்திலேயே பல்வேறு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

Finch

- Advertisement -

6. ஆரோன் பின்ச்: ஆஸ்திரேலியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய இவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி கேப்டனாக முன்னேறினார். குறிப்பாக அனைத்து விதமான உலகக் கோப்பைகளின் அசால்டாக வென்ற ஆஸ்திரேலியாவால் தொட முடியாமல் தவித்து வந்த டி20 உலக கோப்பையை 2021ஆம் ஆண்டு வென்று காட்டிய இவர் சமீப காலங்களாகவே பார்மின்றி தவித்து வந்தார்.

அதனாலேயே கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் விடைபெற்ற அவர் தற்போது அடுத்த தலைமுறைக்கு வழி விடும் வகையில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Christian-3

5. டேனியல் கிறிஸ்டின்: ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் தங்களது நாட்டில் நடைபெறும் பிக்பேஷ் தொடரில் நீண்ட காலமாக விளையாடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் அவர் விளையாடிய சிட்னி அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாததை அடுத்து சொன்னது போலவே ஓய்வு பெற்றுள்ள அவர் 409 டி20 போட்டிகளில் 3825 ரன்களையும் 280 விக்கெட்களையும் எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகந்துள்ளார்.

dwaine pretorius

4. ட்வயன் பிரிட்டோரியஸ்: தென்னாபிரிக்காவை சேர்ந்த அதிரடி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய வாய்ப்புகளை பெறாத காரணத்தால் 33 வயதிலேயே உள்ளூர் டி20 தொடரில் கவனம் செலுத்துவதற்காக சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

3 டெஸ்ட், 27 ஒருநாள், 30 டி20 போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்களை எடுத்துள்ள அவர் தென் ஆப்பிரிக்க அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

Joginder 1

3. ஜோஹிந்தர் சர்மா: கடுகு சிறிதனாலும் காரம் பெரிது என்பது போல் வெறும் 4 ஒருநாள், 4 டி20 போட்டியில் மட்டுமே விளையாடிய இவர் இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். ஏனெனில் 2007 டி20 உலகக்கோப்பை ஃபைனலில் தோனியின் நம்பிக்கை பெற்று அச்சுறுத்தலை கொடுத்த மிஸ்பா-உல்-ஹக்கை சாய்த்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய இவர் நாளடைவில் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

இருப்பினும் மறக்க முடியாத வெற்றி கொடுத்த அவர் இந்திய அணியிலிருந்து வெளியேறினாலும் காவல்துறையில் கடந்த பல வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். கிரிக்கெட்டை விட அந்த பணியை மிகவும் விரும்பி செய்யும் அவர் தொடர்ந்து அதில் கவனம் செலுத்துவதற்காக நேற்று முன்தினம் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சம்பிரதாய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

,murali vijay

2. முரளி விஜய்: 2002 முதல் தமிழகத்துக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2010, 2011 ஆகிய ஐபிஎல் சீசன்களில் சென்னை கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவர் இந்திய டெஸ்ட் அணியிலும் 2015 வரை நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் சதங்களை அடித்து அசத்திய இவர் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்பட தவறியதுடன் ஐபிஎல் தொடரிலும் சொதப்பலாக செயல்பட்டு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார்.

கடைசியாக 2018 பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியிருந்த அவர் மேற்கொண்டு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 61 டெஸ்ட், 17 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இனி வெளிநாடுகளில் வாய்ப்பு தேடி போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Hasim-Amla

1. ஹாசிம் அம்லா: நவீன கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான்களில் ஒருவரான இவர் ஒரு காலத்தில் விராட் கோலி படைத்த சாதனங்களை பின்னாடியே உடைத்து வந்ததை ரசிகர்களால் எப்போதும் மறக்கவே முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் 19000+ ரன்களை குவித்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த இவர் கடந்த வருடமே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : நேதன் லயனை சமாளித்து அடித்து நொறுக்க அவர் ப்ளேயிங் லெவன்ல கண்டிப்பா இருக்கனும் – ரவி சாஸ்திரி அதிரடி

அந்த நிலையில் கடந்த ஜனவரியில் உள்ளூர் போட்டிகளிலும் விடைபெற்ற அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் புதிய டி20 தொடரில் கேப் டவுன் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

Advertisement